news

News March 16, 2025

அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

image

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.

News March 16, 2025

பாஜக, மீடியாக்களை சாடிய லாலு மகன்

image

டான்ஸ் ஆடு, இல்லனா சஸ்பெண்ட் என போலீஸ்காரரை லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் மிரட்டியது கண்டனத்துக்குள்ளானது. இந்தச் சூழலில் சகோதரத்துவ விழாவுக்கு கூட வெறுப்புணர்வு சாயம் பூசுவதா என பாஜகவையும், RSSஐயும் தேஜ் பிரதாப் விமர்சித்துள்ளார். எலும்பு துண்டுக்காக மீடியாக்களும் அவர்கள் பின்னால் செல்வதாக X பக்கத்தில் அவர் வெளியிட்ட கார்ட்டூன் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2025

IPL-க்கு நிதிஷ் ரெட்டி தயார்.. கிடைத்தது கிரீன் சிக்னல்

image

இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்தார். இதனையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை பெங்களூருவில் உள்ள NCA-வில் அவர் மேற்கொண்டார். தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றதாக மருத்துவக் குழு தெரிவித்ததையடுத்து, IPL போட்டி விளையாடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. விரைவில் SRH-வுடன் நிதிஷ் இணைகிறார்.

News March 16, 2025

ஹேங் ஓவரில் இருந்து விடுபட இதை ட்ரை பண்ணுங்க

image

இரவில் மது அருந்திய ‘மப்பு’ தீரலையா? காலையில் எழுந்ததும் தாகம் தீரும் அளவிற்கு தண்ணீர் குடித்தால், நீர்ச்சத்து உயர்ந்து மந்தம் குறையும் *மிட்டாய் சுவைக்கலாம், கஃபைன் இல்லாத சோடா குடிக்கலாம் *மிளகு டீ, இஞ்சி டீ, கிரீன் டீ அருந்தினால் தலைவலி குறையும், மந்தமான நிலை மாறும் *பசித்தாலும் அதிகம் சாப்பிட வேண்டாம். *வாழைப்பழம், பிஸ்கட், வெண்ணெய் தடவிய ரொட்டி சாப்பிடலாம் *மீண்டும் மது குடிக்காதீர்.

News March 16, 2025

முடிச்சுடுங்க! ராணுவத்துக்கு டிரம்ப் உத்தரவு…

image

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடல் கொள்ளை, வன்முறை, தீவிரவாதம் என தீராத பிரச்னையாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக அவர் சாடியுள்ளார். இனிமேலும், அவர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்தால் விளைவுகள் மிகுந்த மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

News March 16, 2025

நாளை நல்ல நாள்.. பத்திரப்பதிவு செய்யுங்க

image

பங்குனி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 17ம் தேதி அதிகளவில் பத்திர பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களுக்கு 150 சாதாரண டோக்கன்களும் வழங்கப்படுகிறது.

News March 16, 2025

எம்புரான் படத்தின் ரிலீஸ் தேதி Locked

image

மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் வெளிவந்த ‘லூசிபர்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக படத்தின் 2ஆம் பாகமான ‘எல் 2 எம்புரான்’ படம் தொடங்கப்பட்டது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற மார்ச் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

News March 16, 2025

இன்று முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 16) முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. இதேபோல், வரும் 18, 19ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடனும், 20, 21ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.

News March 16, 2025

களத்தில் இறங்கிய சுனில் சேத்ரி!

image

இந்திய கால்பந்து அணிக்காக மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ள சுனில் சேத்ரி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மாலத்தீவு மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார். அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 4 வது இடத்தில் உள்ள சுனில் சேத்ரி மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. நட்சத்திர வீரர் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.

News March 16, 2025

நாதக நாமக்கல் மா.செ. விலகல்

image

சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக நாதக நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் அறிவித்துள்ளார். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம் நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு சீமான் உறவு கொண்டு வருவதாகவும், தனது சுயலநலனுக்காக தமிழ் தேசியத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும், இனி அவருடன் பயணிப்பது தமிழின துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!