India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், அதிமுக – காங்கிரஸ் 2 தொகுதியிலும், (கிருஷ்ணகிரி, கரூர்), அதிமுக – விசிக 2 தொகுதியிலும் (சிதம்பரம், விழுப்புரம்) நேரடியாக மோதுகின்றன. அதிமுக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தபின் இந்த எண்ணிக்கை மாறலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 21 பேர் கொண்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 11 புது முகங்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டது போலவே வாரிசுகள் அடிப்படையிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேருவின் மகன் அருண் நேரு, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால், சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும். ரயில்வேக்கு தனி பட்ஜெட். புதிய கல்விக் கொள்கை ரத்து” எனக் கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த தொகுதியில் போட்டி என்பது குறித்த தகவலை இன்று மாலை அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து இன்று மாலை அறிவிப்போம் எனக் கூறியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் இறுதிப் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

திமுகவில் தற்போதுள்ள 10 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. வட சென்னை – கலாநிதி வீராசாமி 2. மத்திய சென்னை – தயாநிதி மாறன் 3. தென் சென்னை – தமிழச்சி 4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு 5. காஞ்சிபுரம் – செல்வம் 6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், 7. வேலூர் – கதிர் ஆனந்த் 8. நீலகிரி – ஆ.ராசா 9. தூத்துக்குடி – கனிமொழி 10. தி.மலை – அண்ணாதுரை ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசின் மூத்த சகோதரியான தமிழச்சி தங்கப்பாண்டியன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2024இல் தென் சென்னையில் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் வாரிசான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ.ஜெயவர்த்தனாவை எதிர்த்து 2ஆவது முறையாக போட்டியிடவுள்ளார்.

கடந்த தேர்தலைப் போல இந்த முறையும், நீட் தேர்வு ரத்து குறித்து தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்றால் நீட் உடனடியாக ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்தது. எனினும் தமிழ்நாட்டுக்கு இதுவரை விலக்கு கிடைக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், 2வது முறையாக தற்போது தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுகவில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. பொள்ளாச்சி – கே.ஈஸ்ரவசாமி 2. தென்காசி – ராணிஸ்ரீகுமார் 3. தஞ்சாவூர் – முரசொலி 4. தருமபுரி – ஆ.மணி 5. சேலம் – செல்வகணபதி 6. ஈரோடு – கே.பிரகாஷ் 7.கள்ளக்குறிச்சி – மலையரசன் 8. கோவை – கணபதி 9. தேனி – தங்க தமிழ்செல்வன் 10. ஆரணி – தரணிவேந்தன் 11. பெரம்பலூர் – அருண்நேரு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” வேலை நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெ. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். முன்னதாக 2014 (வெற்றி), 2019 (தோல்வி) தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்ட அவர், தற்போது 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். 2014 இல் ஜெயவர்த்தன் தனது 26 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.