India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்தியபிரதேசம் போபால் அருகே காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியில் துடித்த அவருக்கு ஓடும் ரயிலுக்குள்ளேயே அங்கிருந்த பெண்கள் பிரசவம் பார்த்தனர். பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சம்பவமறிந்த ரயில்வே போலீசார் தாய்-சேய் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த குழந்தைக்கு ‘காமயானி’ என பெயர் சூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த இஞ்சி மல்லி கசாயம் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி கொத்தமல்லியை சுத்தப்படுத்தி, பூண்டு, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு கலந்து, இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் 3 நாள்கள் குடித்தால் போதும், கல்லீரலில் உள்ள தொற்று & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மறைமுக ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், தன் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விஜய் உணர்த்துவது வழக்கம். இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விஜயின் ஆதரவு இருந்தால், கணிசமான வாக்குகளைப் பெறலாம் என அரசியல் கட்சிகள் கருதுகின்றனர்.

2026இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக சீமான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், அவர் இதனை உறுதிசெய்துள்ளார். திமுக வாரிசு அரசியல் செய்கிறது என விமர்சித்து வந்த சீமான், தற்போது நாதக-வில் அவரது மனைவிக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து சிலர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் ராம்குமார் ராமநாதன் முன்னேறியுள்ளார். சண்டிகரில் ஆடவருக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ராம்குமார், வியட்நாமின் ஹோங் லியுடன் மோதினார். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ராம்குமார் ஆட்டத்தின் முடிவில் ஹோங்கை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

*1401 – தமாஸ்கஸை மங்கோலியப் பேரரசர் தைமூர் தீக்கிரையாக்கினார். *1603 – முதலாம் எலிசபெத் மகாராணி மறைந்த நாள். *1837 – கனடாவில் கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1947 – மவுண்ட்பேட்டன் இந்தியாவின் ஆளுநரானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – சூமேக்கர் – லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது. *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

செய்தியாளர்களுக்கு முன்பாக மனித உணர்ச்சிகளை மறைக்க தான் விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் மனந்திறந்து கூறியுள்ளார். நோ பில்டர் நேஹா நிகழ்ச்சியில் பேசிய அவர், “கலைஞர்களான நாங்களும் மனிதர்கள்தான். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து எழுதுவதும், பேசுவதும் வலியைத் தரும். ஆனால், அதையெல்லாம் மறைத்து, சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

நீண்ட காலம் என்.டி.ஏ கூட்டணியில் பயணித்த அதிமுகவை கபளீகரம் செய்வதை செயல்திட்டமாக பாஜக வைத்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதற்காக தான் அதிமுகவை அக்கட்சி துண்டாடி, வலுவிழக்கச் செய்தது. அதன் மூலம் தேர்தலில் இரண்டாம் இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

பலேனோ, வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. ஜூலை 30, 2019 – நவம்பர் 1, 2019 வரையான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பலேனோ & 4,190 வேகன் ஆர் வாகனங்களின், எரிபொருள் பம்ப் மோட்டாரில் குறைபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, வாகனங்களை திரும்பப் பெற்று, புது பாகத்தை இலவசமாக மாற்றியும் தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

*குறள் பால்: பொருட்பால் | இயல்: அமைச்சியல்
*அதிகாரம்: அமைச்சு
*குறள் எண்: 631
*குறள்:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
*பொருள்: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே சிறந்த அமைச்சர். 
Sorry, no posts matched your criteria.