news

News March 16, 2025

WARNING: ‘கூகுள் குரோம்’ பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா?

image

கூகுள் chrome browserன் பழைய பதிப்பை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. chrome browserன் தற்போதைய பதிப்புக்கு முந்தைய பதிப்புகளில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை பயன்படுத்தி ஹேக்கர்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட முடியும். இதை தடுக்க, லேட்டஸ்ட் வெர்சனை இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

News March 16, 2025

7,783 அங்கன்வாடி பணியிடங்கள்: அரசு அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை TN அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25-35க்குள் இருக்க வேண்டும்.

News March 16, 2025

தினம் ஒரு பொன்மொழி!

image

▶கையாலாகாதவனுக்கு கடவுள் துணை; அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணரமுடியாத உனக்கு தலைவிதி. ▶பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும். ▶முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது; அறிவு தீப்பிடிக்க சற்று தாமதமாகும். ▶விதி என்பது ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும் – தந்தை பெரியார்.

News March 16, 2025

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு, பாலின வேறுபாடின்றி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு ஜூலை 31ம் தேதி வரை <>https://awards.gov.in<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 16, 2025

IPL: இந்த அணிக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி

image

அடுத்த வாரம் IPL தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பெங்களூருவில் உள்ள NCA இன்னும் அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் வரும் 23ம் தேதி SRH அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க முடியாது எனத் தெரிகிறது. பங்கேற்றாலும், பேட்டிங் மட்டும்தான் செய்வார். விக்கெட் கீப்பிங்கில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

News March 16, 2025

மஸ்க்கின் மகனுக்கு உதவிய டிரம்ப்

image

டிரம்பின் ஹெலிகாப்டரில் மஸ்க்கின் மகனை ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் மஸ்கின் மகன் சென்றார். சிறுவன் ஹெலிகாப்டரில் ஏற சிரமப்பட்டபோது, டிரம்ப் அவனுக்கு உதவினார். கடந்த சில நாட்களாக மஸ்க் தனது மகனை அமெரிக்காவில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2025

WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

image

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

News March 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

News March 16, 2025

365 நாட்களுக்கு BSNL அசத்தல் ரீசார்ஜ் ப்ளான்!

image

குறைந்த செலவில் தங்கள் சிம்மை நீண்ட காலத்திற்கு ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு BSNL ஒரு அசத்தல் திட்டத்தை வழங்கியுள்ளது. ₹1,198க்கு ரீசார்ஜ் செய்தால் (ஒரு நாளைக்கு ₹3.28) 365 நாட்கள் செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் வரை இலவசமாக பேசலாம், 30 இலவச SMS, மாதத்திற்கு 3GB டேட்டா பெறலாம். 2வது சிம்மாக BSNL பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த ப்ளானாகும்.

News March 16, 2025

APPLY NOW: இன்றே கடைசி நாள்

image

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 16) கடைசி நாளாகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. <>https://exams.nta.ac.in/NCET/<<>>என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!