India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.
பஹல்காம் தாக்குதல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
பேஸ்பால் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதேநேரத்தில், இந்திய மகளிர் பேஸ்பால் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய மகளிர் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரி மாணவி உயிரிழந்தார். உதவி பேராசியர் ராஜேஷ்குமரால் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் அவர் உயிரிழந்தார்.
▶ ஏப்ரல் 25- சித்திரை- 12 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶ குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் செய்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. மாஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ₹200 கோடி வசூலை கடந்துவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 2 வாரங்களில் ₹172.3 கோடி வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
டி20 போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைக்கும் விராட் கோலி மற்றொரு சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். முதல் பேட்டிங்கின்போது அவர் ஒட்டுமொத்தமாக 62 அரைசதங்கள் அடித்து உலகளவில் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், கோலிக்கு அடுத்தபடியாக, பாபர் ஆசம்(61), கிறிஸ் கெய்ல்(57), டேவிட் வார்னர் (55) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோலியின் இந்த சாதனையை முறியடிப்பது யார்?
‘என்னுடைய தாய் இதயநோயாளி என்பதால் தந்தை இறந்த செய்தியை அவரிடம் கூறவில்லை, காயமடைந்து சிகிச்சையில் உள்ளார் என்றே கூறியுள்ளோம்’ என பஹல்காம் தாக்குதலில் மரணமடைந்த கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி கூறியுள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், சமீபத்தில் இந்தியா வந்து, காஷ்மீருக்கு சுற்றுலா சென்றபோதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை கண்ணீர் கதைகளோ?
Sorry, no posts matched your criteria.