news

News March 27, 2024

ஆட்டநாயகன் விருது பெற்ற சிவம் துபே

image

GT அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த CSK அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பின்பு பேசிய அவர், “தனிப்பட்ட முறையில் ரச்சின் ரவீந்தரா பவர் பிளே ஓவர்களில் அபாரமாக விளையாடி, வெற்றியை CSK பக்கம் எடுத்து வந்தார். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். எங்கள் கையில் விக்கெட்டுகள் இருந்ததால் தான் வென்றோம்” என்றார்.

News March 27, 2024

கல்லீரலை காக்கும் இளநீர் ஊறல்

image

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த (Detox) இளநீர் ஊறலை பருகலாம் என்று மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கப்போகும் முன் இளநீரை வெட்டி, அதில் நாட்டுச் சர்க்கரை போட்டு மூடிவிடவும். 12 மணி நேரம் கழித்து, அதில் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் 45 நாள்கள் குடித்து வந்தால் போதும், கல்லீரலில் உள்ள கெட்ட கொழுப்பு & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

News March 27, 2024

ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சிக்கிறது?

image

ஓபிஎஸ் செய்த தவறுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆன்மா தான் அவரை வஞ்சித்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆதரித்து பேசிய அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவை காப்பாற்ற அவர் தவறிவிட்டார்”என்றார்.

News March 27, 2024

சீனாவை சார்ந்திருக்கும் இந்தியா

image

இந்தியாவின் வாகன உற்பத்தியில் 7.10% பங்களிப்பை சீனா வழங்குவதாக Global Trade Research Initiative தகவல் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “2022-23 இல் இந்தியாவின் வாகன உதிரிபாக இறக்குமதி ₹1.7 லட்சம் கோடியாக இருந்தது. இதில் 30% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. EV வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, உதிரிபாகங்களுக்காக சீனாவை சார்ந்திருப்பது அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

News March 27, 2024

மார்ச் 27 வரலாற்றில் இன்று!

image

1961 ஆம் ஆண்டு முதல் உலக நாடக அரங்க நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. *1886 – அமெரிக்காவில் அப்பாச்சி பழங்குடிகளின் போர்கள் முடிவுக்கு வந்தது.*1892 – ஈழத்து இறையியலாளர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள். *1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் மறைந்த நாள். *1993 – யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார். *1998 – வயாகரா மருந்தை அமெரிக்க அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதித்தது.

News March 27, 2024

வருண் காந்திக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ்

image

பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள வருண் காந்திக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி, “சோனியா-ராகுல் குடும்பத்துடன் வருண் நெருக்கம் காட்டுகிறார். இந்த காரணத்தினால்தான் அவரை பாஜக புறக்கணித்துள்ளது. அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய நான் வரவேற்கிறேன். அவர் எங்கள் கட்சியில் இணைந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்” என்றார்.

News March 27, 2024

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த CSK

image

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2ஆவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள CSK அணி 4 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் நீடிக்கிறது. CSK அணியின் நிகர ரன்ரேட் +1.979 ஆக உள்ளது. 2ஆவது இடத்தில் RR அணியும் (+1.000), 3ஆவது இடத்தில் KKR அணியும் (+0.200) உள்ளன.

News March 27, 2024

நாடு கடத்தும் முடிவு நிறுத்தி வைப்பு

image

அமெரிக்காவுக்கு விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை லண்டன் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அவரது முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், “மரண தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்பது போன்ற உத்தரவாதங்களை ஏப்ரல் 16-க்குள் அமெரிக்கா அளிக்க வேண்டும். இல்லையென்றால் அசாஞ்சேவுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும்” எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.

News March 27, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

*குறள் பால்: பொருட்பால் | இயல்: குடியியல்
*அதிகாரம்: இரவு | குறள் எண்: 1051
*குறள்:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
*பொருள்:
கேட்பதை கொடுக்கக்கூடிய வசதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, தன்னிடம் இருந்தும் அதை அவர் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் இழிவே தவிர கேட்டவருக்கு அல்ல.

News March 27, 2024

பங்கு சந்தைகளில் அந்நிய முதலீடு அதிகரிப்பு

image

நடப்பு மார்ச் மாதத்தில், முதல் 22 நாள்களில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் ₹38,000-க்கும் அதிகமாக வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி போன்ற அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் ₹1,539 கோடி முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!