news

News April 25, 2025

இன்று உலக மலேரியா தினம்!

image

மலேரியா இல்லாத உலகத்தை நோக்கிச் செயல்பட, 2008-ம் ஆண்டு முதல் மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது. பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, அனோபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மனிதனை கடிப்பதனால் மலேரியா பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி மக்களை அச்சுறுத்தும் இந்த கொடிய நோயை விரட்ட அனைவரும் ஒன்றிணைவோம். இந்த ஆண்டின் கருப்பொருள்: ‘Malaria Ends With Us: Reinvest, Reimagine, Reignite’

News April 25, 2025

T20 கிரிக்கெட்டில் தொடரும் கோலியின் ஆதிக்கம்!

image

T20 வரலாற்றில் அதிக அரைசதங்களை அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் 408 மேட்ச்சில் விளையாடி, இதுவரை 111 முறை 50+ ரன்களை விளாசி இருக்கிறார். இந்த பட்டியலில், நேற்றைய அரைசதத்துடன் கோலி, கிறிஸ் கெயிலை (110) முந்தினார். முதல் இடத்தில் டேவிட் வார்னர் (117 முறை) இருக்கிறார். டேவிட் வார்னரின் ரெக்கார்டை விராட் கோலி முந்துவாரா?

News April 25, 2025

தக்காளி, சுரைக்காய், சவ்சவ் விலை ரூ.10ஆக சரிவு

image

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.10ஆக குறைந்துள்ளது. இதேபோல், சுரைக்காய், சவ்சவ் விலையும் கிலோ ரூ.10ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. முள்ளங்கி, வெள்ளரிக்காய் ரூ.13ஆகவும், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், காராமணி, பாகற்காய், முருங்கைக்காய், நூக்கல் ஆகியவை கிலோ ரூ.20ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.18ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.30ஆகவும் சரிந்துள்ளது.

News April 25, 2025

துணைவேந்தர்கள் மாநாடு; பலத்த பாதுகாப்பில் ஊட்டி

image

ஊட்டி ராஜ்பவனில் இன்றும் நாளையும் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். அதேநேரம், கவர்னரைக் கண்டித்து காங்கிரஸ், தபெதிக ஆகியவை போராட்டம் அறிவித்துள்ளதால், மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 25, 2025

செந்தில் பாலாஜி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை

image

அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவு செய்ய செந்தில் பாலாஜிக்கு SC 28ம் தேதி வரை கெடு விதித்தது. இன்று 25-ம் தேதியாகும். ஆதலால், செந்தில் பாலாஜிக்கு இன்னும் 3 நாள்களே அவகாசம் உள்ளது. பெரும்பாலும் அவர் ராஜினாமா செய்யவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சட்டநிபுணர்களுடன் செந்தில் பாலாஜி ஆலோசித்து வருவதாகவும், இன்று அல்லது நாளை ராஜினாமா குறித்து அவர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

News April 25, 2025

கோடீஸ்வர யோகம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

image

ஒரு தாம்பாளத்தில் காகிதத்தை வைத்து, முக்கோணத்தை வரைந்து, மத்தியில் ‘ஓம் சக்தி’ என எழுதுங்கள். தாமரை பூவை வைத்து, உதிரி மல்லிகைப்பூ, ரோஜா கொண்டு ‘ஓம் சக்தி’ என சொல்லி தாமரை மீது போட வேண்டும். இவ்வாறு 108 முறை அர்ச்சனை செய்யுங்கள். பிறகு இவற்றை சிறிய துணியில் கட்டி, 3 நாட்கள் பூஜை அறையில் வைத்து, ஏதாவது ஒரு நீர்நிலையில் கொண்டு விட வேண்டும். பூவின் நறுமணம் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும்.

News April 25, 2025

RCB போல் நாங்களும்… CSK கோச் ஃப்ளெம்மிங் கருத்து!

image

CSK அணி இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்று பரிதாப நிலையில் உள்ளது. ஆனால், அடுத்த வரும் 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவோம் என CSK பயிற்சியாளர் ஃபெளம்மிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையில் இருந்து, கடந்த ஆண்டு RCB தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சென்றதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். CSK பிளே ஆஃப் செல்லுமா? உங்கள் கருத்து என்ன?

News April 25, 2025

தங்கம் விலை 2 நாள்களாக சரிவு.. காரணம் என்ன?

image

தங்கம் விலை 22-ம் தேதி 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த 2 நாள்களில் ரூ.2,280 சரிவைக் கண்டது. USA டாலர் மீதான மதிப்பு அதிகரிக்கையில், அதன் மீது முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு சரிகையில் தங்கம் மீது முதலீடு அதிகரித்து விலை அதிகரிக்கும். தற்பாேது டாலர் மதிப்பு உயர்வது உள்ளிட்டவையே தங்கம் விலை சரிவுக்கு காரணமாகும்.

News April 25, 2025

அதிகாலை தியானமும்.. அபார பலன்களும்

image

அதிகாலை அமைதியானது என்பதால், அப்போது தியானம் செய்வது, பல நல்ல பலன்களை வழங்கும் ◆மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ◆எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு மனது திறம்பட செயல்பட உதவும் ◆கவனச்சிதறல் தவிர்க்கப்படும் ◆தினமும் அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கத்தையும் மேம்படுத்த உதவுகிறது ◆செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற உணர்வுமிகுந்த ஹார்மோன்கள் வெளியேற உதவுகிறது.

News April 25, 2025

மகளிர் உரிமைத் தொகை.. நல்ல செய்தி வந்தாச்சு!

image

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 3 மாதங்களில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும் என Dy CM உதயநிதி கூறி இருந்தார். இந்நிலையில், முறையான அறிவிப்பு கருணாநிதி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பயனர்களின் வங்கிக் கணக்கில் ஜுலை முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!