news

News March 27, 2024

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி

image

தமிழகம் & புதுச்சேரியில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. அதற்குள் மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு கதவு மூடப்படும். அதன்பின், வருவோரை அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

News March 27, 2024

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

image

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளோ, அறிவிப்புகளோ எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

News March 27, 2024

ஐபிஎல் கேரியரை சிக்ஸருடன் தொடங்கிய சமீர்

image

சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். டி20 பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கும் ரஷீத் கான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட்டு ஐபிஎல் கேரியரில் தனது ரன் கணக்கை தொடங்கினார். 2024 ஐபிஎல் ஏலத்தில் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. அவர் இதற்கு முன்பாக உள்ளூர் டி20 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்கள் குவித்துள்ளார்.

News March 27, 2024

கெஜ்ரிவாலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

image

சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News March 27, 2024

ஆவின் பால் விநியோகம் தாமதம்

image

சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பால் விநியோகம் தாமதம் ஆகலாம். இதனால், தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.

News March 27, 2024

10ம் வகுப்பு தமிழ் தேர்வு எழுதாத 17,663 மாணவர்கள்

image

சென்னையில் 10ஆம் வகுப்பு தமிழ்த் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 10ஆம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் 9.26 லட்சம் மாணவர்கள், பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17,663 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.

News March 27, 2024

SRH Vs MI: முதல் வெற்றியை பெறப்போவது யார்?

image

ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான SRH & MI அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் SRH 9 முறையும், MI 12 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் SRH & MI அணிகள் நேரடியாக மோதும் முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.

News March 27, 2024

சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் சித்தியடைந்தார்

image

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் (94) நேற்று சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது கொண்டிருந்த அளவு கடந்த பக்தியின் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள பேலூர் தபோவனத்தில் தன்னை பிரம்மச்சாரியாக இணைத்துக் கொண்டார். எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வந்த அவர், வயோதிகம் காரணமாக நேற்று சித்தியடைந்தார்.

News March 27, 2024

உலக தரவரிசையில் தமிழக வீரர் சத்யன்

image

சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான புதிய தரவரிசையில் 43 இடங்கள் முன்னேறி, தனது சிறந்த தரநிலையாக 60ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். அண்மையில், லெபனானில் நடந்த ஃபீடர் சீரிஸ் போட்டியில் சத்யன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் காரணமாக தரவரிசை பட்டியலில் அவர் ஏற்றம் கண்டுள்ளார்.

News March 27, 2024

பைத்தியக்காரர்கள் தான் பாஜக வளர்ந்துவிட்டது என்பார்கள்

image

தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக பைத்தியக்காரர்கள்தான் சொல்வார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “பிரதமர் மோடி இனிமையாக பேசுவார். ஆனால், தமிழகத்திற்கு எதுவும் செய்யமாட்டார். பாஜக வளர்ந்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாஜக என்பது மாயமான், அதனை மக்கள் நம்பக்கூடாது” என்றார்.

error: Content is protected !!