India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, ஒரு அணி 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில், குஜராத் அணி 90 நிமிடங்களுக்குள் 19 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் கேப்டனானார் ஷுப்மன் கில்.

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 முதல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரையை தொடங்குகிறார். நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் 29ஆம் தேதி பரப்புரையை தொடங்கும் அவர், ஏப்ரல் 17இல் தனது மகன் போட்டியிடும் விருதுநகரில் பரப்புரையை நிறைவு செய்கிறார்கள். 19 நாட்களில் 39 தொகுதிகளிலும் அவர் பரப்புரை செய்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில் ரூ. 5-20 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் 1 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு தொகுதியில் (திமுக கூட்டணி) போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

ஸ்ருதிஹாசனுக்காகவே இனிமேல் ஆல்பத்தில் தான் நடித்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இனிமேல் ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், இனிமேல் ஆல்பத்தில் தான் நடிக்க 3 நாள்கள் படப்பிடிப்பு, ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனே காரணங்கள் என்று கூறினார்.

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிகணக்கானார் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனம் தற்போது இந்தியாவுக்குள் பணம் அனுப்புதல் வசதியை அளித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக குறைந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹49,720க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹6,215க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80.20க்கும், கிலோ வெள்ளி ₹300 குறைந்து ₹80,200க்கும் விற்பனையாகிறது.

வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது என்று ப.சி விமர்சித்துள்ளார். பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளி உயர்ந்து 22,112 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. LIC உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

குணா படத்தின் பாடலை மேற்கோள் காட்டி தோனியை கவிதை நடையில் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்ட அவர், “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் கோப்பை சிஎஸ்கேவுக்கு தான்” எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.