news

News March 27, 2024

பாஜக ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது

image

கேரளாவில் INDIA கூட்டணிக்கு 20 இடங்களில் வெற்றி கிடைக்கும் என திருவனந்தபுரம் காங்., வேட்பாளர் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து பேசிய அவர், “பாஜக ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும். கடந்த முறை போல, இந்த முறை பாஜகவால் வெற்றிபெற முடியாது. கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்., வெற்றிபெறும்” என்றார்.

News March 27, 2024

அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்

image

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.கே.சின்னசாமி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், நான்கு முறை எம்எல்ஏ.,வாகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரான இவர் பாஜகவில் இணைந்துள்ளது, அதிமுகவிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமை கேப்டனாக்க முடிவு?

image

டி20 உலகக் கோப்பை கேப்டனாக பாபர் அசாமை நியமிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கேப்டன்களாக ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஷான் மசூத் நியமிக்கப்பட்ட பிறகு, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக்க முடிவு செய்துள்ளது.

News March 27, 2024

ஞாயிறு அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

image

ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 31) அன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படவுள்ளது. ஆனால், அன்றைய தினம் அரசு தொடர்பான சேவைகள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் வழக்கமான பரிவர்த்தனைகள் செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, மார்ச் 29, மார்ச் 31 & ஏப்ரல் 1 வழக்கமான வங்கி சேவைகள் கிடையாது

News March 27, 2024

பம்பரம் சின்னம் அளிக்க உத்தரவிட முடியாது

image

மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட பம்பரம் சின்னத்தை ஒதுக்குமாறு அக்கட்சி கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அதனை தர மறுத்துவிட்டது. இதனையடுத்து பம்பரம் சின்னத்தை ஒதுக்க உத்தரவிடுமாறு மதிமுக நீதிமன்றத்தை நாடியது. ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

News March 27, 2024

‘டைட்டானிக்’ கப்பலின் கதவு ₹6 கோடிக்கு ஏலம்

image

டைட்டானிக் படத்தில் இடம்பெற்ற கதவு ஒன்று, ஏலத்தில் சுமார் ₹6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டைட்டானிக் படத்தின் இறுதி நிமிடங்களில், கதாநாயகனும், கதாநாயகியும் கடலில் மிதக்கும் கதவு ஒன்றின் மீது உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்ததை மறந்திருக்க மாட்டோம். அந்த கதவானது, டல்லாஸில் நடைபெற்ற ஹெரிடேஜ் ஏலத்தில் சுமார் 718,750 டாலர்களுக்கு விற்பனையானது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,98,99,163 ஆகும்.

News March 27, 2024

பல மடங்கு உயர்ந்த சு.வெங்கடேசனின் சொத்து

image

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வேங்கடேசன் 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது ₹13 லட்சம் சொத்து வைத்திருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்தமுறை அவரது சொத்து மதிப்பு 2 கோடி ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு சுமார் 15 மடங்கு உயர்ந்தது எப்படி என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News March 27, 2024

எஸ்பிஐ ஏடிஎம் கார்டு பராமரிப்பு கட்டணம் உயர்வு

image

ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை வரும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கி உயர்த்தவுள்ளது. கிளாசிக், சில்வர், குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் ரூ.125ல் ரூ.200 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஜிஎஸ்டி இன்றி ரூ.75 அதிகரிக்கவுள்ளது. இது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

News March 27, 2024

ஆறாவது பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6ஆவது பன்னீர் செல்வம் என்ற நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கெனவே பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5 பேர் (முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட) வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று எம்.பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒரு நபர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

News March 27, 2024

சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்திய திரிஷா

image

நடிகை திரிஷா ஒரு படத்துக்கான சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதற்கு முன்பு ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாகவும், ஆனால் தற்போது கமலின் தக் லைஃப் படத்தில் நடிக்க ரூ.12 கோடியாக சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!