news

News March 27, 2024

முக்கிய ஆதாரங்களை வெளியிடும் கெஜ்ரிவால்

image

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதை நீதிமன்றத்தில் நாளை நிரூபிப்போம் என கெஜ்ரிவால் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்ட சோதனைகளை ED நடத்தியதாக குறிப்பிட்ட அவர், ஊழல் எனக்கூறி அவர்கள் பணத்தை தேடி வருகின்றனர். ஆனால், எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றார். மேலும், நீதிமன்றத்தில் நாளை அனைத்து ஆதாரங்களையும் கெஜ்ரிவால் வெளியிடுவார் எனவும் அவர் கூறினார்.

News March 27, 2024

அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல!

image

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் நிதி இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு பாஜக தலைமை தன்னிடம் பேசியதாகவும், ஆனால், அந்த அளவுக்கு தன்னிடம் பண பலமில்லை என அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள அவர், தமிழகம் அல்லது ஆந்திரா ஆகிய மாநிலங்களில் எங்கிருந்து போட்டியிடுவது என்ற குழப்பமும் இருந்ததால் தேர்தலில் போட்டியிடவில்லை என விளக்கமளித்துள்ளார்.

News March 27, 2024

மொத்தம் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல்

image

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 1403 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1403 வேட்பாளர்களிடம் இருந்து மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாளை பரிசீலனை முடிந்த பின்னர் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுவிடுவர்.

News March 27, 2024

பண மழையில் நனையப் போகும் ராசிகள்

image

நவ கிரகங்களில் மங்கள நாயகனான குரு பகவன் திகட்ட திகட்ட செல்வ செழிப்புகளை வழங்குவார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு, ஏப்ரல் 1 முதல் ரிஷப ராசிக்கு இடம் பெயர்வதால் மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் ராசியினருக்கு பண வரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம், புதிய தொழிலில் அடியெடுத்து வைக்கும் யோகம், கொடுக்கல் வாங்கலில் சிக்கல் விலகுவது என பல்வேறு சுப பலன்களை இவர்கள் அனுபவிக்க உள்ளனர்.

News March 27, 2024

வாணவேடிக்கை காட்டும் திலக் வர்மா

image

ஐதராபாத் அணி நிர்ணயித்த (278) இமாலய இலக்கை துரத்தி ஆடிவரும் மும்பை அணியில், திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 24 பந்துகளில் அரை சதம் (2 பவுண்டரி, 5 சிக்ஸர்) அடித்த அவர் எதிரணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து வருகிறார். SRH 10 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில், MI 10 ஓவர்கள் முடிவில் 141 எடுத்துள்ளது. மும்பை அணி இன்று வெற்றிபெற்று சாதனை படைக்குமா?

News March 27, 2024

மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

image

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ED இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் மீறல் வழக்கில், மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானிக்கு தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.

News March 27, 2024

உடற்பயிற்சியே சிறந்த தீர்வு

image

இன்றைய நவீன உலகில் தூக்கமின்மையால் பலர் அவதிப்படும் சூழலில், அதனை போக்க உடற்பயிற்சி சிறந்த தீர்வு என நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், வாரத்திற்கு 2-3 முறை ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் தூக்கமின்மைக்கு தீர்வு காண முடியும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், உடல் ரீதியில் சுறுசுறுப்பானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

News March 27, 2024

இரட்டை இலை சின்னம் முடக்கம்?

image

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அளித்த மனுவின் மீது 29ஆம் தேதி முடிவெடுக்க இருக்கிறது தேர்தல் ஆணையம். அதிமுகவுக்கு தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றும் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அப்படி ஒதுக்காத பட்சத்தில் அதனை இபிஎஸ் அணிக்கு கொடுக்காமல் முடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

News March 27, 2024

18 பந்துகளில் 50 ரன்கள் விளாசிய மும்பை அணி

image

ஐபிஎல் பிரிமீயர் லீக் தொடரில் இன்று மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. முதலில் விளையாடிய SRH அணி 277 ரன்களை குவித்தது. 278 ரன்கள் இலக்கை துரத்தும் மும்பை அணியும் ரன் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இஷான் கிஷன் 34(13), ரோஹித் ஷர்மா* 18(7) ரன்கள் என முதல் 3 ஓவர்களில் 50 ரன்களை குவித்தனர். மும்பை அணி தற்போது வரை 4 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியை எந்த அணி வெல்லும்?

News March 27, 2024

ரன்களை வாரி வழங்கிய MI பவுலர்கள்

image

★ க்வேனா மாஃபாகா: 4-0-66-0
★ ஜெரால்ட் கோட்ஸி: 4-0-57-1
★ ஹர்திக் பாண்டியா: 4-0-46-1
★ ஜஸ்பிரித் பும்ரா: 4-0-36-0
★ பியூஷ் சாவ்லா: 2-0-34-1
★ ஷம்ஸ் முலானி: 2-0-33-0

அதிகபட்சமாக மாஃபாகா 66 ரன்களை அள்ளிக் கொடுத்துள்ளார்

error: Content is protected !!