India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த கமல், தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்தார். அத்துடன், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சேலத்தில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு முதல்வர் ஸ்டாலினும் இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இருவரும் இன்று சேலத்தில் சந்தித்து பேசினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல், தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப். 18, தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப். 20ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது. அத்துமீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ராமராஜன் படங்களின் வசூலை பார்த்து ரஜினிகாந்தே பயந்ததாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். ராமராஜன் ஹீரோவாக நடிக்கும் ‘சாமானியன்’ பட விழாவில் பேசிய அவர், “ரஜினி சாரே ஒருமுறை ராமராஜனுக்கு எப்படி இவ்வளவு கலெக்ஷன் வருகிறது என என்னிடம் ஆச்சரியப்பட்டார். அந்த அளவுக்கு பாப்புலராக இருந்த மனிதர் ராமராஜன். இந்த படத்திலும் அவர் நிச்சயம் ஜொலிப்பார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது”எனத் தெரிவித்தார்.

கடலூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரசாரத்தின் போது பாஜக – பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முத்துநகரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவரது வாகனத்தின் முன் யார் நிற்பது என இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனால், அங்கு சிறிதுநேரம் பதற்றமான சூழல் நிலவியது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் இங்கு வந்துபோக முடிகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளாா். தயாநிதி மாறனை ஆதரித்து பேசிய அவர், “பிரதமர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளதால் தான், அண்ணாமலையால் தமிழ்நாட்டில் தொடர்ந்து அவதூறாக பேச முடிகிறது. முதல்வர் எங்களை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார், அதனால் பொறுமையாக இருக்கிறோம்” எனக் கூறினார்.

சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. குணா குகையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலைக் குவித்த மலையாள படம் என்ற சாதனையை படைத்தது. உலக அளவில் இப்படம் ₹200 கோடிக்கும் மேல் வசூலை குவித்த நிலையில், படக்குழுவுக்கு வாழ்த்து குவிகிறது. அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகளை காணலாம். 3) ரூ.5 கோடிக்கும் அதிகமான வருமானம் கொண்டோருக்கு விதிக்கப்படும் சர் சார்ஜ் வரியை 37%ல் இருந்து 25% ஆக குறைத்தல் 4) 2023 ஏப்ரல் 1க்கு பிறகு அளிக்கப்படும் காப்பீடு முதிர்வு தொகையை வரி கட்டமைப்புக்குள் கொண்டு வருதல் 5) அரசு சாரா ஊழியர்களின் விடுப்பு பண வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துதல்

ஏப்ரல் 1 முதல் கீழ்காணும் வருமான வரி அமலுக்கு வருகிறது. 1) ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 5%, 2) ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் உடையோருக்கு 10%, 3) ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு 15%, 4) ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20%, 5) ரூ.15 லட்சம், அதற்கு மேல் வருமானம் உடையோருக்கு 30% வரி அமலுக்கு வரவுள்ளது.

கேரளாவின் வடகரா தொகுதியில் இடது முன்னணி சார்பில் முன்னாள் அமைச்சர் சைலஜா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து மநீம தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் மலையாளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அதில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களுக்கும், இம்முறை நடைபெற உள்ள தேர்தலுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக கூறிய அவர், மத்தியில் சைலஜா போன்றவர்கள் நமது குரலை எதிரொலிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.