news

News April 25, 2025

பாக். வீரருக்கு அழைப்பு.. நீரஜ் சோப்ரா வருத்தம்

image

எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.

News April 25, 2025

₹1000 கோடி முதலீடு… தொழில்துறையை ஈர்க்கும் TN

image

தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

News April 25, 2025

பாக். துணை பிரதமரின் சர்ச்சை பேச்சு.. தொடரும் பதற்றம்

image

பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக பார்க்கப்படும் எனவும் இசாக் தார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

துணை வேந்தர்களுக்கு போலீசார் மிரட்டல்: ஆர்.என்.ரவி

image

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மோசமாக உள்ளதாக ASER அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் விமர்சித்துள்ளார். உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என காவல்துறை மிரட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
பல பல்கலை.களை நேரில் ஆய்வு செய்த பிறகே இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாகவும் கவர்னர் கூறியுள்ளார்.

News April 25, 2025

புதுச்சேரியில் மதுபான விலை உயருகிறது

image

புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 25, 2025

விவசாயிகளுக்கு அபராதம்.. எஸ்.பி.வேலுமணி கேள்வி

image

பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணை என்ற பெயரில் விவசாயிகளுக்கு அபராதம் விதித்துள்ளது என பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அரசு நிலத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

News April 25, 2025

கவர்னர் வழக்கு வெற்றி.. CM ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

image

கவர்னர் வழக்கு விவகாரத்தில் வெற்றி பெற்ற முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். மே 3-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்திவைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2025

BREAKING: லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை

image

காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவ்வமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் அலி என தெரிய வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும், தொடர் எதிர்தாக்குதல் நடவடிக்கைகளால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

News April 25, 2025

இன்று தோனி நிகழ்த்தபோகும் மாபெரும் ரெக்கார்ட்!

image

CSK-ன் கேப்டன் தோனி, T20 கிரிக்கெட்டில் இன்று தனது 400-வது மேட்ச்சில் விளையாட இருக்கிறார். இதன் மூலம், இந்த சாதனையை செய்யும் 4-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். இப்பட்டியலில், ரோஹித் சர்மா (456), தினேஷ் கார்த்திக் (412) விராட் கோலி (407) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். இன்று தோனி CSK-வுக்கு வெற்றியை தேடிக் கொடுப்பாரா?

News April 25, 2025

வினய்யின் படுகொலை குறித்து அறுவெறுக்கத்தக்க கமெண்ட்!

image

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய்யின் படுகொலை குறித்து, ம.பி. இளைஞரின் கமெண்ட் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதாவது, ‘வினய்யின் மனைவியை விசாரிக்க வேண்டும். அவரே ஒருவேளை, வாய்ப்பு கிடைத்ததும் ஒருவரை வைத்து கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம்’ என கமெண்ட் செய்திருந்தார். நெட்டிசன்கள் இவரை திட்டிதீர்க்கும் நிலையில், ம.பி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மனசாட்சியே இல்லையா?

error: Content is protected !!