India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பள்ளிகளுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்.10, 12ல் நடைபெறவுள்ள தேர்வுகள், ரம்ஜானுக்காக 22, 23ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையில் மாற்றம் இருக்குமா என கேள்வி எழுந்தது. எனினும்,விடுமுறையில் மாற்றம் இல்லை, தேர்வெழுத மாணவர்கள் வந்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் 4ஆம் தேதி ஜனநாயகத்தின் உயிர்த்தெழுதல் நாள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி கிறிஸ்தவப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள அவர் தனது X பக்கத்தில், ‘இந்திய மக்களுக்கும் , சங் பரிவார்களுக்கும் இடையிலான கருத்தியல் போரில் இதுவே மக்கள் வெல்லும் நாள். ஜனநாயகம் உயிர்த்தெழும் நாள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாள்களாக சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் தோனி கலந்துகொள்ளவில்லை. மேலும், விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் மாற்று விக்கெட் கீப்பரான ஆரவெல்லி அவனிஷ் மேற்கொண்டு வருகிறார். தோனி தொடர்பான இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அண்ணாமலைக்கு கோவையில் டெபாசிட் கூட கிடைக்காது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அண்ணாமலை போன்று அரசியல் அறிவு இல்லாதவரை தமிழகம் இப்போது தான் பார்க்கிறது. அதனால் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அவரால் கொச்சைப்படுத்த முடிகிறது. அவரின் அரைவேக்காட்டு பேச்சுக்கு மக்கள் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். அப்போது தான் அவர் திருந்துவார்” எனக் கூறினார்.

கர்நாடகா பாஜக மூத்த தலைவரும், மேலவை உறுப்பினருமான தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 2004-2009 வரை காங். எம்.பியாக இருந்த அவர், 2014ல் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, கர்நாடகா மேலவை உறுப்பினராக இருந்து வந்த அவர், பதவியை ராஜினாமா செய்த 30 நாட்களில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் காங். 23 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவர் சூளுரைத்தார்.

இலங்கைக்கு கச்சத்தீவை காங்., தாரை வார்த்ததாக பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு, தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வப்பெருந்தகை, கச்சத்தீவு விவகாரத்தில் விஞ்ஞான ரீதியாக அணுகிய இந்திரா, கொடுக்க வேண்டியதை கொடுத்து, செழிப்பான கடல் பகுதிகளை இந்தியாவுக்கு மீட்டெடுத்தார். இந்த விவகாரத்தில் பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நுழையும்போது பாஸ்வேர்டு, பிற விவரங்களை தானாக நிரப்பும் (autofill) ஆப்ஷன் சரியானது என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஐதராபாத் பேராசிரியர் அங்கித் கங்வால் நடத்திய ஆராய்ச்சியில், இது மொபைல் OSஇன் பாஸ்வேர்டு நிர்வகிப்பு செயல்திறனைக் குறைப்பதும், சைபர் தாக்குதலை எளிதாக்குவதும் தெரியவந்துள்ளது.

பஞ்சாபிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ், 155 கி.மீ வேகத்தில் பந்து வீசி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்து வீசியவர்கள்; ☛ ஷான் டைட் (RR) 157.71 kmph – 2011 ☛ லாகி ஃபெர்குசன் (GT) 157.3 kmph – 2022 ☛ உம்ரான் மாலிக் (SRH) 157 kmph – 2022 ☛ அன்ரிச் நார்ட்ஜே (DC) 156.22 கிமீ – 2010 ☛ மயங்க் யாதவ் (LSG) 155.8 kmph – 2024.

ரஜினிபட ஹீரோயினாக நடித்த ரதி அக்னிஹோத்ரி, போலந்தில் இந்திய உணவகம் நடத்தி வருகிறார். ரஜினியுடன் முரட்டுக்காளை, அன்புக்கு நான் அடிமை படங்களிலும், கமலுடன் உல்லாச பறவைகள், இந்தியில் ஏக் துஜே கேலியே படங்களிலும் நடித்த ரதி, பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 1985ல் தொழிலதிபர் அனில் விர்வானியை திருமணம் செய்த ரதி, 2015ல் விவாகரத்து செய்தார். தற்போது போலந்தில் உணவகத்தை நடத்தி வருகிறார்.

கச்சத்தீவு பற்றி இன்று வரை உண்மைக்கு புறம்பாக திமுக பிரசாரம் செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, கச்சத்தீவை இரக்கமில்லாமல் காங்கிரஸ், இலங்கைக்கு கொடுத்து விட்டதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.