India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல் என ஓபிஎஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், “இருப்பதிலேயே பெரிய பழம் பலாப்பழம் தான், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் பலா கொடுக்கும். அதைப்போல இந்த தொகுதிக்கு தேவையானதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.

I.N.D.I.A கூட்டணி சார்பாக தேர்தல் ஆணையத்திடம் பிரியங்கா காந்தி 5 கோரிக்கைகளை வைத்துள்ளார். அவை, தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியை குறிவைத்து ED, IT மற்றும் CBI செய்யப்படுவதை ECI தடுக்க வேண்டும். ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுவிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளை முடக்குவதை தடுக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும்.

இந்த மக்களவைத் தேர்தல் ஊழலை எதிர்ப்போருக்கும், ஊழலை காக்கப் போராடுவோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி.,யின் மீரட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணம் திருடப்படுவதை தடுத்திருக்கிறோம். ஊழலுக்கு எதிராக நான் போராடுவதால், சிலர் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஊழல்வாதிகளிடம் இருந்து ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்’ என்றார்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘LIC’. ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதலில் எஸ்.கே நடிப்பில் உருவாக இருந்த இப்படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் ஏப்.14ல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 162/8 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பம் முதலே SRH அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய க்ளாஸான் இன்று 24 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடைசியில் களமிறங்கிய சமத்தின் (29) அதிரடி ஆட்டத்தால் SRH 162 ரன்கள் எடுத்துள்ளது. GT தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளன. இதற்கு பதில் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில், ஏப். 1ஆம் தேதி முதல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் போர்டு விநியோகிக்கப்படவுள்ளன. வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

பிரதமர் மோடி ஆட்சியில் நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சார்பில் திருச்சி சிவா MP அவரது உரையை வாசித்தார். அதில், தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து மத்திய அரசு கைது செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

கச்சத்தீவு பிரச்னை மீண்டும் பூதாகரமாகும் நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 2016இல் தனது பேஸ்புக்கில், ‘கச்சத்தீவை தாரை வார்க்க எந்தக்காலத்திலும் ஒப்புக்கொண்டதும் இல்லை. உடன்பட்டதும் இல்லை. 1974ஆம் ஆண்டு ஆக.21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். கச்சத்தீவை மீண்டும் பெற போராடியிருக்கிறேன்’ என கூறியிருந்தார்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையை எதிர்கொள்வேன் என அமீர் தெரிவித்துள்ளார். விசாரணையில் கொஞ்சமும் தயக்கமின்றி என்னுடைய தரப்பில் உள்ள உண்மையை, எடுத்துச் சொல்லி, 100 சதவீதம் வெற்றியோடு திரும்புவேன். இறைவன் மிகப்பெரியவன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அமீரின் நண்பர் ஜாஃபர் சாதிக் கைதான நிலையில், அமீரை வரும் ஏப்.2இல் ஆஜராக போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தல் பரப்புரையின் போது 500 ரூபாய் பண கட்டை காட்டிய கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் வேடசந்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பையில் இருந்து திடீரென நோட்டுக்கட்டுக்களை எடுத்து பொதுமக்களிடம் காட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவர் உள்ளிட்ட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.