news

News April 25, 2025

மாலை வரை மழை கொட்டும்

image

தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News April 25, 2025

வீடுகளுக்கு மானிய விலை இண்டர்நெட்

image

மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுவது போல, 100 Mbps வேகத்தில் மாதம் ₹200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால், மக்களுக்கு எளிதாக இணைய சேவை கிடைப்பது மட்டுமல்லாமல், பணமும் மிச்சப்படுத்த முடியும்.

News April 25, 2025

பஹல்காமில் ஒரு அயோத்தி சசிகுமார்

image

தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, தன்னையும் தனது குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் இருவர் காப்பாற்றினர் என கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி சரத் கூறியுள்ளார். அயோத்தி படத்தில், இந்து மத குடும்பத்திற்கு இஸ்லாமியரான சசிகுமார் உதவுவது போன்று பஹல்காமிலும் நிகழ்ந்துள்ளது. மேலும், தந்தையின் சடலம் கிடைக்கும் வரையிலும் அவர்கள் ஆரத்தி உடனே இருந்துள்ளனர்.

News April 25, 2025

பாக். நடிகரின் பாடல்கள் நீக்கம்

image

பாக். நடிகர் ஃபவாத் கான் – வாணி கபூர் நடித்துள்ள ‘<<16201311>>அபிர் குலால்<<>>’ படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த புதன்கிழமை வெளியாக இருந்த பாடலும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் மே 9-ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலை இப்படத்தின் நாயகன் ஃபவாத் கான் கண்டித்திருந்தார்.

News April 25, 2025

மத்திய அரசில் ₹30,000 சம்பளத்தில் வேலை..!

image

இந்திய ஆயுதப் படைகளில் சேர்வதற்கான ‘அக்னிபத்’ பதவிக்கான விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிகிறது. 17½ – 21 வயதிற்குள் இருக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு, Recruitment Rally-யின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். சம்பளமாக ₹30,000 நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 25, 2025

அதிமுக மூத்த தலைவர் மறைவு… இபிஎஸ் இரங்கல்

image

உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சந்திரசேகர் ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். #RIP

News April 25, 2025

பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவினோம்.. PAK ஒப்புதல்

image

பயங்கரவாத இயக்கங்களுக்கும் PAK-க்கும் உள்ள தொடர்பை, அதன் பாதுகாப்பு அமைச்சரே போட்டு உடைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் PAK-க்கு பங்கிருக்கிறது என IND குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், PAK கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது என அமைச்சர் கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார். USA, மேற்குலக நாடுகளுக்காகவே PAK இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.

News April 25, 2025

துணை ராணுவப் படையினர் விடுமுறை ரத்து

image

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்தியா-பாக் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதை கருத்தில் வைத்து துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவு அனுப்பியுள்ளனர். அதில் உடனே பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர்.

News April 25, 2025

காஷ்மீர் குறித்த கூகிள் Search.. கண்டுக்காத பாகிஸ்தான்!

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து, கூகிளில் காஷ்மீர் பற்றிய தேடல்கள்தான் கடந்த 3 நாள்களில் அதிகரித்துள்ளது. Google search density அடிப்படையில், இந்தியா 100%, UAE 88%, பூடான் 76% ஆகியவை அதிகமாக தேடியுள்ளன. சம்மந்தப்பட்ட பாகிஸ்தானில் வெறும் 27% தான் காஷ்மீர் குறித்து தேடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நாடுகளான சீனா (13%), அமெரிக்கா (11%), ரஷ்யா (3%) போன்ற நாடுகளில் காஷ்மீர் குறித்து பெரிய தாக்கம் இல்லை!

News April 25, 2025

இந்தியா vs PAK: தொடங்கியதா போர்?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, J&K-ல் தீவிரவாதிகளுடனும், பாக். ராணுவத்துடனும் இந்திய ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. LOC-யில் நேற்று இரவு முதல் பாக். துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை தகர்த்த இந்திய ராணுவம், LET தளபதியையும் சுட்டுக் கொன்றது.

error: Content is protected !!