India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவுடன் செவ்வாய் பகவான் இணைந்தது அங்காரக யோகத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மேஷம், கன்னி, கும்பம், மீன ராசியினர் பல்வேறு இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். தொழிலில் நஷ்டம், குடும்ப வாழ்க்கையில் பிரச்னை, பண வரவில் சுணக்கம், வீண் விவாதங்கள் தேடி வருவது என மேற்கண்ட ராசியினர் அடிமேல் அடி வாங்கப் போகின்றனர். தகுந்த பரிகாரங்களை செய்துகொண்டால் நல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளையும் 100 சதவீதம் எண்ண வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பான தாக்கலான மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது கூடுதல் அலுவலர்களை நியமித்தால், விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண 6 மணி நேரம் மட்டுமே ஆகுமென கூறப்பட்டுள்ளது. தற்போது ஒரு தொகுதியில் பதிவாகும் 5% விவிபேட் ஒப்புகைச்சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

2023-24ஆம் நிதியாண்டில் இந்திய விமான நிலைய ஆணையம் ரூ.5,000 கோடியை லாபமாக ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரிப்பால் AAI-இன் ஆண்டு வருவாய் ரூ.15,000 கோடியாக அதிகரித்துள்ளது. வரி விதிப்புக்கு முந்தைய லாபம் மட்டும் ரூ.5,000 கோடியாக இருக்குமென இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

உலகமே உற்றுநோக்கும், பாராட்டக்கூடிய ஆட்சியை பிரதமர் மோடி கொடுத்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அவர், “இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது” என பேசியுள்ளார்.

பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலின் பெரியதம்பி, தொடர் சிகிச்சையில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யூடியூப்பில் 2.5 கோடி ஃபாலோயர்களை கொண்டுள்ள இந்த சேனல் உலகம் முழுவதும் பிரபலம். குறிப்பாக இன்னைக்கு ஒரு புடி என்ற வசனத்திற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில், இதய நோய் பிரச்னையால் மார்ச் 28-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மீனவர்கள் கைது தொடர்பாக கடந்த 2022க்குப் பின் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே 6 மாதத்திற்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது, இலங்கை உள்நாட்டு பிரச்னையால் மார்ச் 2022க்குப் பின் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் ஐ.பி.எல் போட்டியை காண டிக்கெட் கிடைக்காமல் அலைமோதும் ரசிகர்கள் ஏராளம். அதே பெயரில் சென்னையில் கீதம் உணவகம் “இட்லி பிரிமீயர் லீக்” என்ற பெயரில் இட்லி திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த விளம்பரத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா ‘மார்க்கெட்டிங்கில் இந்தியாவின் படைப்பாற்றலை நிறுத்த முடியாது. நான் எனது சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ், இந்தியைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இயக்குனர் அட்லீ கால் பதிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் அல்லு அர்ஜூன் அவர் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தில் சமந்தா அல்லது த்ரிஷாவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 125/9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே முன்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக பாண்டியா 34, திலக் வர்மா 32 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் போல்ட் 3, சாஹல் 3, பர்கெர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் RR அணி விளையாட உள்ளது.

நீட் தேர்வு விலக்கு எனும் கண்கட்டி வித்தையை திமுக காண்பித்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘எங்கே பார்த்தாலும் திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருட்கள் தலைவிரித்து ஆடுகிறது. எடப்பாடி பழனிசாமி பாமக துரோகம் செய்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுகவிற்கு உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.