India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் வந்தால் தமிழகத்திற்கு சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய அவர், தேர்தல் சீசனுக்காக மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக அரசின் திட்டங்கள் (காலை சிற்றுண்டி) இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே முன்னோடியாக உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் PS5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. மற்றபடி ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை. இதன் டிஜிட்டல் எடிசன் விலை ரூ.44,990, டிஸ்க் வெர்ஷன் விலை ரூ.54,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தொடங்குகிறது.

அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தேர்தல் வருவதால் மீனவர்கள் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசுகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது அவர்கள் கவலைப்படவில்லை. தற்போது பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசி வருவது வேடிக்கையாக உள்ளது’ என விமர்சித்துள்ளார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டது போன்ற ஒரு போலி அறிக்கை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், “தமிழக வளர்ச்சியை மட்டும் பாராமல் தேசிய வளர்ச்சியை பார்க்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என்று விஜய் சொன்னது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கை போலி என்று தவெகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி வீரர் விராட் கோலி, ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் இருவரும் அதிக ரன்கள் (181) எடுத்துள்ளனர். ஐபிஎல் விதிகளின்படி இரண்டு வீரர்கள் ஒரே அளவு ரன்கள் எடுத்திருந்தால், அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ளவருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். இதன்படி பராக் 160.17 ஸ்ட்ரைக் ரேட்டும், விராட் கோலி 141.40 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளனர். இதன் காரணமாக பராக்கிற்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதுவரை ஆர்சிபி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 1 வெற்றி 1 தோல்வியுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறையினர் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே மஹுவா மீது ஃபெமா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2022 முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெற உள்ள நிலையில், அவரது உடல் சென்னை சிறுசேரியில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் தன்மயி மோதிவாலா என்பவர் X தளத்தில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவருடைய பெற்றோர் 1994ஆம் ஆண்டு ₹500 மதிப்பிலான SBI வங்கியின் பங்குகளை வாங்கியிருக்கின்றனர். அதன்பின், அவர்களே அதனை மறந்து போயிருக்கின்றனர். எதேச்சையாக அந்த பங்குகள் மருத்துவர் மோதிவாலாவிடம் கிடைக்க, அதன் மதிப்பு தற்போது ₹5 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தை முதலீட்டின் சக்தியை பாருங்க.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்திவந்த நிலையில் சமீப காலமாகவே அது பிரச்சனையில் உள்ளது. தற்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறிவரும் பாஜக 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.