news

News April 3, 2024

ஏப்.18, 19ல் விளம்பரம் வெளியிடத் தடை

image

தமிழகத்தில் ஏப்.18, 19ஆம் தேதிகளில் செய்தித்தாள், ஊடகங்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் சார்பில் விளம்பரம் வெளியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும், வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அரசியல் கட்சிகள் விளம்பரம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2024

வயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல்

image

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். 2ஆவது முறையாக வயநாட்டில் போட்டியிடும் அவர், தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த தேர்தலில் இங்கு போட்டியிட்ட அவர், 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News April 3, 2024

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ – டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால், ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களையும் வாடகை கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 3, 2024

பாண்டியாவை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை இல்லை

image

யாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்பதை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் முடிவு செய்வார்கள், அதில் யாரும் தலையிட கூடாது என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஐபிஎல் என்பது முதலில் இந்திய அணி கிடையாது என்று கூறிய அவர், பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையில்லாதது என்றார். பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்ததில், மும்பை அணி தெளிவான திட்டமிடலுடன் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 3, 2024

பிரதமரின் தமிழக வருகை உறுதியாகவில்லை

image

பிரதமரின் தமிழக வருகை உறுதியாகவில்லை, உறுதியானவுடன் சொல்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தர உள்ளதாகவும், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, ஏப்.9, 10, 13, 14ஆம் தேதிகளில் பிரதமர் மோடி தமிழகத்தில் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

தங்கத்தின் விலை எப்போது குறையும்?

image

பல்வேறு பொருளாதார காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், எப்போதுதான் தங்கத்தின் விலை குறையும் என ஏங்கி தவித்து வருகின்றனர். ஆனால், 2025ஆம் ஆண்டு இறுதி வரை தங்கத்தின் விலை உயரவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் சிறுக சிறுக தற்போதே தங்கத்தை சேமிக்க தொடங்குவது புத்திசாலித்தனம் என்கிறார்கள்.

News April 3, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

image

பிரதமர் மோடி ரோடு ஷோ செல்வதை போல் முதல்வர் ஸ்டாலினை 10 கி.மீ ரோடு ஷோ வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். ரோடு ஷோ வருவதற்கும், மக்களை சந்திக்கவும் முதல்வர் ஸ்டாலின் பயப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், முதல்வர் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

News April 3, 2024

தமிழகத்தில் அதிமுக ஆதரவு அலை வீசுகிறது

image

தமிழ்நாட்டில் அதிமுக அலை வீசுவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக எந்த பகுதிக்கு சென்றாலும், மக்களின் ஆதரவு உற்சாகமாக இருப்பதாக தெரிவித்த அவர், வழக்கம் போல் கொங்கு மண்டலத்தில் அதிமுக வரலாற்று வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், சேலம் தொகுதியில் அதிமுவுக்கு வரலாற்று வெற்றியை பொதுமக்கள் வழங்கி திமுகவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

News April 3, 2024

இரா.க.சிவனப்பன் காலமானார்

image

புகழ்பெற்ற நீரியல் நிபுணரும், பேராசிரியருமான முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை.,யில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்ற சிவனப்பன், அமெரிக்க பல்கலை.,களில் நீர் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை பற்றி சிறப்பு அறிவியல் பயின்றவர். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர்.

News April 3, 2024

அரிய சாதனை படைத்த கோலி

image

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அரிய சாதனையை நேற்று படைத்துள்ளார். ஆம்! ஒரே மைதானத்தில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். RCBயின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கிங் இந்த மைல்கல்லை எட்டினார். ரோஹித் சர்மா (வான்கடே-80 போட்டிகள்), தோனி (சேப்பாக்-69 போட்டிகள்) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

error: Content is protected !!