India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சில்லுன்னு ஒரு காதல் படத்திற்குப் பிறகு 18 வருடங்கள் கழித்து சூர்யா- ஜோதிகா இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலை மையப்படுத்தி உருவாக உள்ள இந்த படத்தை, இயக்குநர்கள் ஹலிதா ஷமீம் மற்றும் அஞ்சலி மேனன் இருவரும் இணைந்து இயக்குவார்கள் எனத் தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த ஜோடி 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

கெஜ்ரிவால் உடல் எடை 65 கிலோவில் சீராக இருப்பதாக திகார் சிறை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்ததில் கெஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளது. சிறைக்கு கொண்டு வரப்பட்டதில் இருந்து தற்போது வரை அதே எடையில் இருக்கிறார் என்று சிறை நிர்வாகம் அதிஷியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வீட்டில் சமைக்கப்பட்ட உணவு அவருக்கு வழங்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கொமதேக தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாநிலக் கட்சிகளை பாஜக அழித்து வருவதாக கூறிய அவர், இந்த தேர்தலில் அதிமுக தோற்றால் மட்டுமே தமிழகத்தில் அக்கட்சி தொடர்ந்து இருக்கும் எனக் கூறினார். மேலும், தேர்தலுக்கு பிறகு மோடியை, இபிஎஸ் கண்டிப்பாக ஆதரிப்பார் எனவும் அவர் ஆருடம் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு கவலை அளிப்பதாக எண்ணெய் அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார். மூன்றாவது பெரிய இறக்குமதி நாடான இந்தியா, அச்சம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், கச்சா எண்ணெய் விலை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நீடித்தால் எண்ணெய் நிறுவனங்கள் தகுந்த முடிவெடுக்கும் என்றார்.

தேர்தல் நெருங்கும் சூழலில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியமில்லை என்கிறார் முன்னாள் இந்திய துணைத் தூதர் நடராஜன். கச்சத்தீவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே ‘அது முடிந்த கதை’ என தீர்ப்பளித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் மாநில அரசு எதுவும் செய்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகையும், மாண்டியா மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சுமலதா, பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளார். தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய அவர், சுயேச்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன். விரைவில் பாஜகவில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் எனத் தெரிவித்தார். இவர் தமிழில் முரட்டுக்காளை, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசெளகரியம் ஏற்படலாம். தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் அடிக்கடி, இளநீர், மோர், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கவும். இதை அண்ணாமலையும், வானதி சீனிவாசனும் தற்போது ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மச்சானை விட பச்சான் (தங்கர் பச்சான்) தான் முக்கியம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் தங்கர் பச்சானை கடலூர் தொகுதி மக்கள் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இவரை விட ஒரு சிறந்த வேட்பாளர் யாராவது இருந்தால் எனக்கு அடையாளம் காட்டுங்கள் எனக் கூறினார். இதே தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் அன்புமணியின் மச்சான் ஆவார்.

அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து, குடியாத்தத்தில் பிரேமலதா பரப்புரை செய்தார். அப்போது, கேப்டனை போல் எனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக பாடுபடுவேன் என நான் பிறந்த இந்த மண்ணில் இருந்து சபதம் ஏற்கிறேன் என சூளுரைத்தார். மேலும் குடியாத்தத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை, 30 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் உள்ளது. அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் வளர்ச்சி அடையும் என்றார்.

எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை கர்நாடக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிட ஈஸ்வரப்பா விருப்பம் தெரிவித்த நிலையில், அந்த தொகுதி எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் ஈஸ்வரப்பா அங்கு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், பாஜக தலைமை அவரிடம் சமரசம் பேசி வருகிறது.
Sorry, no posts matched your criteria.