news

News April 3, 2024

ஆயுள் முழுவதும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்

image

ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் இருக்கும் அளவுக்கு செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கரூர் பிரசாரத்தில் பேசிய அவர், செந்தில் பாலாஜியின் பினாமிகள் தமிழகம் முழுவதும் 3,000 பார்களில் கள்ள மதுவை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவில் ஊழல் செய்வதிலும், போதைப் பொருளை விற்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

News April 3, 2024

சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

image

ஏப்ரல் 5ஆம் தேதி SRH அணிக்கு எதிரான IPL போட்டியில் CSK வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் விளையாட மாட்டார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்கிறது. இதற்கான விசா எடுப்பதற்காக அவர், வங்கதேசம் சென்றுள்ளார். இதனால் SRH-க்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மாட்டார் எனவும், ஏப்.7இல் மீண்டும் அணிக்கு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 3, 2024

நாளை OTT-இல் வெளியாகிறது ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம், நாளை (ஏப்.5) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகிறது. ‘குணா’ குகையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 60 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தை இன்று நள்ளிரவு 12 மணி முதல் OTT இல் காணலாம்.

News April 3, 2024

பணம் இருக்கிறது.. மனம் இல்லை

image

மத்திய அரசிடம் பணம் உள்ளது, ஆனால் தமிழக அரசுக்கு தர மனம் தான் இல்லை என பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை பிரசாரத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும், அவரது குழப்பம் ஜூன் 4ஆம் தேதி தெளிந்துவிடும் எனவும் கூறினார். மேலும், தமிழகத்திற்கு செய்த சிறப்புத் திட்டம் என்ன எனக் கேட்டும் பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

News April 3, 2024

IPL: புதிய சாதனை படைத்தார் நரைன்

image

டெல்லி அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி வரும் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பல சாதனைகள் படைத்துள்ளார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 75 ரன்கள் எடுத்ததே நரைனின் அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்நிலையில், இன்று 85 ரன்கள் எடுத்த நரைன், தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். மேலும், நடப்பு சீசனில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ரியான் பராக்கின் (84) சாதனையையும் முறியடித்துள்ளார்.

News April 3, 2024

பாஜக-பாமக நள்ளிரவுக் கூட்டணி

image

பாஜக – பாமக கூட்டணி நள்ளிரவுக் கூட்டணி என CPI மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். பாஜகவால் 3ஆவது முறையாக ஆட்சிக்கு வர முடியாது எனக் குறிப்பிட்ட அவர், பாஜக ஆட்சியை மக்கள் அகற்றாவிட்டால் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிடும் என எச்சரித்தார். மேலும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ED, IT, CBI அமைப்புகள் தற்போது பிரதமர் மோடியின் கட்டளைக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News April 3, 2024

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை

image

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை எம்.பி. நிதி ரூ.17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ரூ.5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சரவணன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள சு.வெங்கடேசன், ரூ.16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

அதிரடியாக அரை சதம் கடந்தார் நரைன்

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிவரும் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் 21 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். டெல்லியின் பவுலிங்கை நாலாபக்கமும் பறக்கவிட்ட அவர், 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இது ஐபிஎல்லில் இவரது 6வது அரை சதமாகும். இவரது அதிரடியான ஆட்டத்தால் KKR அணி 6 ஓவர்கள் முடிவில் 88/1 ரன்கள் எடுத்துள்ளது.

News April 3, 2024

பாஜக மீது கமல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

image

பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜக தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டதாக மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், பாஜகவினர் சரித்திரக் கதையை கூறுவதை தவிர்த்து, 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தார்கள் எனக் கூற வேண்டும் என்றார். மேலும், பாஜக ஆட்சியில் ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

News April 3, 2024

APPLY NOW: 9,144 காலிப் பணியிடங்கள்

image

நாடு முழுவதும் காலியாக உள்ள 9,144 தொழில்நுட்பாளர் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1,100 முதல் தர டெக்னீஷியன் பணிகளுக்கு 18-33 வயதினரும், 7,900 3ஆம் தர டெக்னீஷியன் பணிகளுக்கு 18-36 வயதினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 08. மேலும் தகவலுக்கு <>https://www.rrbchennai.gov.in/<<>> என்ற இணையதளத்தை பார்க்கவும்.

error: Content is protected !!