India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ED கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-இல் கெஜ்ரிவால் கைதானார். தனது கைதை சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரி அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னதாக இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் 6 மாத சிறைத் தண்டனைக்கு பிறகு நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

சென்னை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை அடுத்து 4 பேரும், சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கீழமை நீதிமன்ற தீர்ப்பில், காரணமின்றி உயர்நீதிமன்றங்கள் தலையிட்டு திருத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ம.பி.யை சேர்ந்த இருவர் வழக்கு ஒன்றில் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, பிறகு உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டம், உண்மைக்கு எதிராக கீழமை நீதிமன்ற தீர்ப்பு இல்லாத வரை, அதில் தலையிடக் கூடாது என உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் முருகனுக்கு 500க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. குறிப்பாக, அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றத்தில் அமர்ந்த நிலையிலும், மற்ற தலங்களில் நின்ற நிலையிலும் காட்சி தருகிறார். திருச்செந்தூரில் நான்கு உற்சவர்களுக்கும் தனி சன்னதி உண்டு. அதைப்போல சின்னாளப்பட்டி முருகன் நான்கு முகத்துடன் அருள் பாலிக்கிறார். பழனி கோயிலில் மட்டும் ஆனி கேட்டையில் அன்னாபிஷேகம் நடைபெறுவது கூடுதல் சிறப்பு.

இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “40 – 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, குழந்தைகள், முதியோரின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சுகாதார முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

PhonePay பயனர்கள் இனி, சிங்கப்பூரிலும் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அந்நாட்டு சுற்றுலா வாரியத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, PhonePay பயனர்கள் தங்கள் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக இரு நாடுகளுக்கும் இடையே வெளிநாட்டு பரிவர்த்தனைகளை நொடியில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிகிறது.

அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய த்ரில்லர் படத்தில், அவருக்கு ஜோடியாக 2 பேர் நடிக்கவுள்ளனர். மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிருஷ் திருக்குமரன், புதிதாக இயக்கவுள்ள இப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகிய 2 பேர் நடிக்கவுள்ளனர். படத்துக்காக தனது உடல் எடையை அருண் விஜய் குறைத்து வருகிறார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. ஆனால், 90% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் பேசுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிலர் அதிமுகவை அழிக்க துடிக்கின்றனர். எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது எனக் கூறிய அவர், திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடப்படுகிறது. நாங்கள்( அதிமுக) ஆட்சிக்கு வந்ததும் திமுக மீது வழக்குப் போடுவோம் என எச்சரித்தார்.

ஐபிஎல்லில் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை டெல்லி அணி படைத்துள்ளது. கொல்கத்தா அணியிடம் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி நேற்று தோற்றது. இதுபோல 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அந்த அணி தோற்பது இது 3வது முறையாகும். இதன் மூலம் 100 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் அதிகமுறை தோற்ற அணி என்ற சாதனையை ஆர்சிபியுடன் பகிர்ந்தது.
Sorry, no posts matched your criteria.