news

News April 4, 2024

கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது

image

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்ததால் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து சேனா அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News April 4, 2024

தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் ஒன்று சேரக்கூடாதா?

image

‘முரண்பாடான கொள்கை உடைய நீங்கள் ஒன்று சேரும் போது, தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் ஒன்று சேரக்கூடாதா?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராமதாஸ், பா.ஜ.கவிடம் சரணடைந்திருப்பதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு அன்புமணி, ‘திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே ஒரே கொள்கையா உள்ளது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 4, 2024

அரசியலில் குதிக்க தயாராக உள்ளேன்

image

அரசியலுக்கு வருமாறு பொதுமக்கள் தன்னை வற்புறுத்தி வருவதாக பிரியங்கா காந்தி கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், ‘காந்தி குடும்பத்தின் உறுப்பினராக அரசியலில் இருந்து விலகியிருப்பது கடினம். அமேதியில் இரானி உள்ளிட்ட எந்தவொரு தலைவரையும் எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன். ராகுலை தேர்வு செய்யாதது தவறு என அமேதி மக்கள் உணர்கின்றனர்’ என்றார்.

News April 4, 2024

மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்

image

பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஃபிலிப் (83) எர்ணாகுளத்தில் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பல காலம் வசித்துவந்த அவர், கடைசி காலத்தை பிறந்த ஊரான எர்ணாகுளத்தில் செலவிட்டார். அவருக்கு ஆலியம்மா என்ற மனைவியும் மீரா ஜாஸ்மினுடன் சேர்த்து 5 பிள்ளைகளும் உள்ளனர். இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.

News April 4, 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மார்க்சிஸ்ட்

image

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு வந்தால், UAPA, PMLA, CAA போன்ற கொடூரமான சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெரும் செல்வந்தர்களுக்கு வரி, பொது செல்வ வரி, பரம்பரை வரி ஆகியவற்றிற்காக ஒரு புதிய சட்டம், நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி இரட்டிப்பு போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

News April 4, 2024

இனிமேல் தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம்

image

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால் இனிமேல் மக்களவைத் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகம் தான் என ப.சிதம்பரம் அச்சம் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பிரசாரத்தில் பேசிய அவர், ஒரு மாநிலத்தின் முதல்வரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றார். மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என குற்றம்சாட்டினார்.

News April 4, 2024

குஜராத் அணி பேட்டிங்

image

ஐபிஎல் தொடரில் இன்று குஜராத்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. குஜராத் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று 7ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News April 4, 2024

அஜித் கார் விபத்தில் சிக்கியது உண்மை தான்

image

நடிகர் அஜித் கார் விபத்தில் சிக்கியது உண்மை தான். ஆனால் ஹம்மர் கார் என்பதால் அவருக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்துவிட்டாரென அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், ‘இப்படி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாங்க. ஆனால் பலரும் படம் டிராப் என சொல்றப்ப உழைத்த அனைவருக்கும் கஷ்டமாக இருக்குமென்பதால் ரசிகர்களுக்கும் டீமுக்கும் உற்சாகம் அளிக்கவே வீடியோவை வெளியிட்டோம்’ என்றார்.

News April 4, 2024

“விஷப் பாம்பை நம்பு. பாஜகவை நம்பாதே”

image

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று பேசியிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால் பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியிருக்கிறார். “பாஜக நாட்டை அழித்து வருகிறது, ED போன்ற தன்னாட்சி அமைப்புகள் பாஜகவுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன.” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மம்தா முன்வைத்துள்ளார்.

News April 4, 2024

ரூ.605 கோடி கேட்டு ஹீரோ நிறுவனத்துக்கு ஐ.டி.,நோட்டீஸ்

image

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.605 கோடி வரி பாக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதில் 2013-14 முதல் 2017-2018 மற்றும் 2019-20ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளில் ரூ.308.65 கோடி வருமான வரி செலுத்தப்படாமல் உள்ளது. மேலும் அதற்கான வட்டி ரூ.296.22 கோடி சேர்த்து, மொத்தம் ரூ.605 கோடியை செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!