news

News April 26, 2025

CSK செய்த மோசமான சாதனை..!

image

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?

News April 26, 2025

டைனோசர் காலத்தில் வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு..!

image

பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Hell Ant எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

News April 26, 2025

பில்கேட்ஸின் தன்னம்பிக்கை வரிகள்..!

image

▶ வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும். ▶ வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம். ▶ உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ▶ பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வையும் தேடுகிறேன்.

News April 26, 2025

சமந்தா அழுதால் நானும் அழுவேன்: பிரபல இயக்குநர்

image

நடிகை சமந்தா குறித்து இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தான் சமந்தாவின் மிகப் பெரிய ரசிகை என்றும், 5 ஆண்டுகளாக அவருடன் டச்சில் இருப்பதாகவும் சுதா தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா அழுதால், தானும் அழுவேன் என தெரிவித்த அவர், சமந்தாவின் போராடும் குணம் தனக்கு பலம் தருவதாக குறிப்பிட்டார். ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் சுதா வேடிக்கையாக கூறியுள்ளார்.

News April 26, 2025

அதிநவீன ஆயுதம்.. வரலாறு படைத்த இந்தியா!

image

பாக். உடனான போர் பதற்ற சூழலில், ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. Scramjet Engine-ஐ DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒலியைவிட 5 மடங்கு வேகம், அதாவது மணிக்கு 6,100 கி.மீ.க்கும் அதிகமாக பயணித்து, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை இந்த இஞ்சினுக்கு உண்டு. இதன்மூலம், அடுத்த தலைமுறை ஏவுகணை உருவாக்கத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.

News April 26, 2025

கோலி அவசரப்பட்டுவிட்டார்: ரெய்னா

image

சர்வதேச டி20-ல் இருந்து கோலி வெகு சீக்கிரமாகவே ஓய்வு அறிவித்துவிட்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனிலும், கடந்த CT தொடரிலும் அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, அவரால் 2026 வரையிலும் டி20-ல் விளையாடியிருக்க முடியும் எனவும், அவரது ஃபிட்னஸ் இன்னும் Peak-ல் தான் இருப்பதாகவும் ரெய்னா கூறியுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News April 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 318 ▶குறள்: தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். ▶பொருள்: பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.

News April 26, 2025

‘இட்லி கடை’ படப்பிடிப்பு.. அப்டேட் கொடுத்த படக்குழு

image

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாங்காக்கில் நடைபெற்ற இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ப. பாண்டி, ராயன், NEEK படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள இந்த படம், அக்.1-ம் தேதி வெளியாக உள்ளது. யாரெல்லாம் இந்த படத்துக்கு வெயிட்டிங்?

News April 26, 2025

DoYouKnow: ஆணுறையை ஆயுதமாக்கிய இந்திய ராணுவம்

image

1971 போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. அதில் எதிரியை வீழ்த்த நம் ராணுவம், ஆணுறைகளை பயன்படுத்தியது உங்களுக்கு தெரியுமா? ஆம், பாக்., போர்க் கப்பல்களை தகர்க்க பயன்படுத்திய கன்னி வெடிகளை ஈரம் பாதிக்காமல் வைக்க, அவற்றை ஆணுறைகளால் கவர் செய்தனர். அதேபோல, வங்கதேச சதுப்புநிலப் பகுதிகளில் துப்பாக்கியின் ‘muzzle’ பகுதியை உலர்வாக வைக்க ஆணுறையால் மூடினர். வல்லவனுக்கு condoms-ம் ஆயுதமே!

News April 26, 2025

தோல்விக்கு பிறகு கேப்டன் தோனி கூறியது என்ன?

image

155 ரன்கள் போதுமானது அல்ல, கூடுதலாக 20 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். மிடில் ஓவர்களில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பிரேவிஸ் நன்றாக பேட்டிங் செய்ததாகவும், அவரை போன்று மிடில் ஓவர்களில் விளையாட வேண்டிய தேவை இருக்கிறது எனவும் தோனி தெரிவித்தார். தோனி கூறியது சரிதானா? CSK வேறென்ன மாற்றம் செய்ய வேண்டும்?

error: Content is protected !!