news

News April 5, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் உருவாக்கியது

image

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களால் உருவாக்கப்பட்டதென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை காங்கிரசால் உருவாக்கப்பட்டதல்ல, மக்களால் உருவாக்கப்பட்டது என்றும், அதை காங்கிரஸ் எழுத மட்டுமே செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

News April 5, 2024

அறிவிப்புகள் காங்கிரஸுக்கு “கை” கொடுக்குமா?

image

பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளான அக்னிபத், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல திட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்னைக்குரிய நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இவை கட்சி சார்பு இல்லாத பொதுமக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து காங்கிரஸின் வெற்றி அமையும்.

News April 5, 2024

சவுத் இந்தியன் குயின் பிறந்தநாள் இன்று

image

பான் இந்தியா நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா இன்று தனது 28ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரைத்துறையினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கன்னட பெண்ணான ராஷ்மிகா, கீதா கோவிந்தம் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி தென் இந்தியா முழுவதும் பிரபலமானார். சவுத் இந்தியன் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரை சுற்றி சமீபத்தில் சர்ச்சைகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

News April 5, 2024

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியை உறுதி செய்யுங்க

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சாகு கடிதம் எழுதியுள்ளார். 15X15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதிகள் செய்து தரவும், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.

News April 5, 2024

மத்திய அரசுப் பணிக்கான தேர்வுக் கட்டணங்கள் ரத்து

image

மத்திய அரசுப் பணிக்கான தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெறுப்பு பேச்சு, மத மோதல்களை தடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ள காங்கிரஸ், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், 10% EWS இட ஒதுக்கீடு அனைத்து சாதி ஏழைகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

News April 5, 2024

பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் : காங்., அறிவிப்பு

image

நாடு முழுவதும் மகாலட்சுமி திட்டம் மூலம் ஏழைப்பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்., கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. பாஜக அரசு இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும். முப்படைகளுக்கும் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

News April 5, 2024

சீன எல்லையில் மீண்டும் பழைய நிலை

image

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீன எல்லையில் மீண்டும் பழைய நிலை ஏற்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சி தேர்தல் அறிக்கையில், “மாலத்தீவுடனான உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும். சீன எல்லையில் மீண்டும் பழைய நிலை ஏற்படுத்தப்பட்டு, அங்கு நமது வீரர்கள் ரோந்து செல்ல வழிவகை செய்யப்படும். அப்பகுதியில் இந்திய வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவது உறுதி செய்யப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

News April 5, 2024

மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு தீர்வு: காங்., கட்சி உறுதி

image

நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்., அறிவித்துள்ளது. அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும். அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்; டெல்லி அரசின் ஆலோசனைகளை ஏற்று துணை நிலை ஆளுநர் செயல்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News April 5, 2024

கொலீஜியம் முறை ரத்து

image

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் கொலீஜியம் முறை ரத்து செய்யப்பட்டு, நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உணவு, உடை, திருமணம் ஆகியவற்றில் தலையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

News April 5, 2024

பிரபல இயக்குநரிடம் பணம் மோசடி

image

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர் தேசிங்கு பெரியசாமி. இவரிடம் ரூ.3 லட்சம் மோடி செய்த புகாரில், அவரது உதவி இயக்குநர் முகமது இக்பால் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தேசிங்கு பெரியசாமி தற்போது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

error: Content is protected !!