news

News April 5, 2024

ஓ.பன்னீர்செல்வத்தின் விடா முயற்சி

image

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல முறை முயன்று தோற்ற பின்னரும் அவருடைய நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டது. ஓபிஎஸ்-க்கு பலாப்பழ சின்னத்தை கொடுத்துவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையிலும் ஓபிஎஸ் போராடி வருகிறார்.

News April 5, 2024

ராகுலுக்கு பதிலாக களம் இறங்கும் பிரியங்கா கணவர்?

image

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. ஆனால் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் களம் கண்ட ஸ்மிருதி இரானி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்தார். இந்நிலையில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News April 5, 2024

தமிழகத்தில் 13 நாட்கள் விடுமுறை

image

ஏப். 9 முதல் 21 வரை ஆகிய 13 நாட்கள் தேர்தல் மற்றும் வெயில் காரணமாக மாணவர்/ ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.8ஆம் தேதி அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். ஏப்.9 முதல் 21 வரை ஆசிரியர், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஏப்.22, 23இல் விடுபட்ட தேர்வு நடைபெறும். ஏப்.22 – 26 வரை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

News April 5, 2024

தள்ளுபடி விலையில் தங்கம் வாங்கலாம்..!

image

தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தை தள்ளுபடி விலையில் வாங்க முடியும். ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிடும் போது அதை ஆன்லைனில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடியில் வாங்கலாம். மற்ற நேரங்களில் டீமேட் கணக்கு இருந்தால் Secondary Market மூலம் தள்ளுபடி விலையில் தங்கம் வாங்கலாம். 24 கேரட் தங்கம் இன்று ரூ.6,990 ஆக இருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி Secondary Market-இல் ரூ.6,765க்கு விற்பனையாகிறது.

News April 5, 2024

முத்தலாக் சட்டத்தால் முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்தேன்

image

முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் குடும்பங்களை பாதுகாத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், முத்தலாக் முறையானது முஸ்லிம் மதத்தை சேர்ந்த தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும், அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்து அவர்களை மட்டுமன்றி முஸ்லிம் குடும்பங்களையும் தான் காத்துள்ளதாக தெரிவித்தார்.

News April 5, 2024

எந்த கட்சியை நம்பியும் அதிமுக இல்லை

image

அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காரணத்தால் மட்டுமே பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். பாஜக உள்பட எந்த கட்சியையும் நம்பி அதிமுக எப்போதும் இருந்தது இல்லை, எங்களுடன் இணைந்ததால் அவர்கள் தான் பலனடைந்தார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற அவர், ராமநாதபுரத்தில் 4 ஓபிஎஸ் நிற்பதற்கு அதிமுக காரணம் இல்லை என்றார்.

News April 5, 2024

கங்கனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

image

இமாச்சலின் மண்டி தொகுதி வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத்தை பாஜக களம் இறக்கியுள்ளது. தொடர்ந்து சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பினார். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜியா? என அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

News April 5, 2024

பிரதமர் குறித்து தேர்தலுக்கு பிறகு முடிவு

image

பிரதமர் பதவி குறித்து மக்களவைத் தேர்தலுக்கு பிறகு I.N.D.I.A. கூட்டணி கூடி முடிவு செய்யும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது ராகுல் காந்தியிடம், I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கூட்டணியின் தலைவர், பிரதமர் யார் என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு கூட்டணி கூடி முடிவு எடுக்கும் என்றார்.

News April 5, 2024

சார்பட்டா 2 தாமதத்திற்கு இதுதான் காரணமாம்

image

சார்பட்டா பரம்பரை பட வெற்றியை அடுத்து, 2ஆம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி, அதன்பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இது குறித்து விசாரித்ததில் இணை தயாரிப்பு நிறுவனமான S ஸ்டூடியோஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதனால், வேறொரு நிறுவனத்துடன் இணைவதா? தனியாக தயாரிப்பதா? என்ற யோசனையில் பா.இரஞ்சித் இருப்பதால் தாமதமாவதாக கூறப்படுகிறது.

News April 5, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 10 முத்துக்கள்

image

1.நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு
2.நீட், CUET தேர்வுகள் கட்டாயம் இல்லை
3.இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50% ஆக உயர்த்த சட்ட திருத்தம்
4.மாநில நிதிப்பங்கீட்டிற்கு புதிய கொள்கை
5.மீனவர்களை பாதுகாக்க புதிய வழிமுறை
6.தேசிய கல்விக்கொள்கையில் திருத்தம்
7.அக்னிபத் ஆள்சேர்ப்புத் திட்டம் ரத்து
8.கட்சித் தாவினால் உடனடி பதவி இழப்பு
9.மாநிலப் பட்டியலுக்கு சில பகுதிகள் மாற்றம்
10.ஜிஎஸ்டி 2.0 அமல்

error: Content is protected !!