India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவிக்காதது ஏன்? என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை மாநில அரசு விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது தேர்தலுக்காக மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், மக்களை ஏமாற்றும் செயல் இது என விமர்சனம் செய்தார். மேலும், கச்சத்தீவு பிரச்னைக்கு திமுக-காங்கிரஸ் தான் காரணம் என சாடினார்.

உ.பி.,யில் 80 தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்று விடும் என்பதால், சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பியாகி விட்டாரென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டிவி நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுமென்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம். பிஹாரில் அனைத்து தொகுதிகளையும், மே.வங்கத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும்’ என்றார்.

ஒரே இரவில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாது. இதை புரிந்து கொண்டு தடகள வீரர்களுக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆதரவளிக்க வேண்டுமென சானியா மிர்சா வேண்டுகோள் விடுத்துள்ளார். ANIக்கு அளித்த பேட்டியில் அவர், ‘ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வெல்ல அங்கீகாரத்தை எதிர்பாராமல் தடகள வீரர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகள் சிந்தும் வேர்வை, கண்ணீரால் தான் தங்கப்பதக்கம் உருவாகிறது’ என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடர் புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. BARC தகவலின்படி முதல் 10 போட்டிகளை தொலைக்காட்சியில் 35 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். இது வரலாற்று உச்சமாகும். இந்த தகவலை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. சுமார் 8,028 கோடி நிமிடங்கள் ஐபிஎல் தொடர் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20% அதிகம்.

இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தலையிட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. போலி சமூகவலைதளப் பக்கங்களை உருவாக்கி அதில் மீம்ஸ், வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியிட்டு, இந்திய வாக்காளர்களை திசை திருப்பும் செயலில், சீன ஹேக்கர்கள் ஈடுபடக் கூடும். எனவே, மிகுந்த கவனமுடன் செயல்படுமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

எனது 2ஆவது தாய் வீடு தூத்துக்குடி என கனிமொழி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவர், விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது, இந்தத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடிக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கும் என விமர்சித்தார். மேலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என அனைத்திலும் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக அவர் கூறினார்.

கோவை சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்யச் சென்ற அண்ணாமலையை அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாமதமாக வந்த அண்ணாமலை பிரசாரம் செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவினர் போராட்டத்தில் குதித்ததையடுத்து போலீசார் அண்ணாமலையை திரும்பிப் போகச் செய்தனர்.

ஐபிஎல் 18ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய CSK வீரர்கள் ஷிவம் துபே 45, ரஹானே 35, ஜடேஜா 31, கெய்க்வாட் 26 ரன்கள் எடுத்தனர். SRH தரப்பில் புவனேஸ்வர், நடராஜன், கம்மின்ஸ், ஷபாஸ் அஹமத், உனத்கட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

60 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் குப்பைகளை கூட முறையாக கையாளத் தெரியாத அரசுகளாக திமுக, அதிமுக அரசுகள் இருந்ததாக தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்கு தீர்வு கிடையாது, குப்பை மேடு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடையாது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், மாற்றம் வேண்டுமா? ஏமாற்றம் வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.