news

News April 6, 2024

நியூயார்க்கில் திடீர் நிலநடுக்கம்

image

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவானது. நியூயார்க்கில் இருந்து மேற்கில் 45 மைல் தொலைவில், சுமார் 10 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம், பாஸ்டன் முதல் பால்டிமோர் நகரம் வரை உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகளுக்கு மேல், நில அதிர்வை மக்கள் பலரும் உணர்ந்தனர். இதனால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

News April 6, 2024

நீங்களும் ஆகலாம் ‘MAN OF THE MATCH’

image

அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஷஷாங்க் திகழ்கிறார் என பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தின்போது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை ஜாலியாக எடுத்துக் கொண்டு, தன்னுடைய திறமைகளை தக்க நேரத்தில் அவர் வெளிப்படுத்தியதாக புகழ்ந்துள்ள ப்ரீத்தி ஜிந்தா, நம்பிக்கையுடன் முயற்சித்தால், ஷஷாங்கை போல வாழ்க்கை எனும் போட்டியில் நீங்களும் ஆகலாம் ‘MAN OF THE MATCH’ எனக் கூறியுள்ளார்.

News April 6, 2024

கவிதாவிடம் விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் அனுமதி

image

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பி.ஆர்.எஸ் எம்.எல்.சியுமான கவிதாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மார்ச் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கவிதா, நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இடைக்கால ஜாமின் கோரிய கவிதாவின் மனு, வரும் ஏப்.9ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

News April 5, 2024

பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டதா காங்கிரஸ்?

image

அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எந்த வாக்குறுதியில் இடம்பெறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஒரு ஊழியர் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக தரப்படும். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், ‘பழைய ஓய்வூதிய திட்டம் வாக்குறுதியில் தான் இடம்பெறவில்லை தவிர எங்கள் மனதில் என்றுமுள்ளது’ என்றார்.

News April 5, 2024

IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. டிராவிஸ் ஹெட், அபிஷேக், மார்க்ரம் ஆகியோர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 5ஆவது இடத்திற்கு முன்னேறியது.

News April 5, 2024

கோடி கோடியாய் பணம் கொட்டப்போகும் ராசிகள்

image

சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்தில் தற்போது செவ்வாய் பகவானும் நுழைகிறார். இதனால் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்ப ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. தொழிலில் இரட்டிப்பு லாபம், புதிய தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்பு, திருமண வரன் தேடி வந்து அமைவது, குழந்தை பாக்கியம், வெளிநாடு செல்லும் யோகம், அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.

News April 5, 2024

வேலையில்லாமல் இருப்பது அவர்கள்தான்

image

நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ப.சிதம்பரமும், ராகுல் காந்தியும் தான் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாகக் கூறிய அவர், மக்களின் பிரச்னைகளை தீர்க்க பாஜகவால் மட்டுமே முடியும் என அவர்கள் நம்புவதாக தெரிவித்தார். முன்னதாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை இரட்டிப்பாகியுள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

News April 5, 2024

டெல்லி அணிக்கு பின்னடைவு

image

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து குல்தீப் யாதவ் வெளியேற உள்ள தகவலால் டெல்லி அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். PBKS, RR அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர், இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் CSK, KKR அணிகளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், அவருக்கு தொடர் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது.

News April 5, 2024

மதுரை சிறையில் விசாரணைக் கைதி மரணம்

image

மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த கார்த்திக், திடீரென உயிரிழந்திருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இட்லி கார்த்திக் என்ற பெயர் கொண்ட இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக சிறையில் விசாரணை கைதியாக இருக்கும் இவர், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 5, 2024

தப்பை சமாளிக்கும் கங்கனா ரணாவத்

image

நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத், சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசியிருந்தார். இதனை நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியபின், தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 1943ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து தன்னைத் தானே பிரதமராக சுபாஷ் சந்திர போஸ் அறிவித்துக் கொண்டதை சுட்டிக் காட்டியிருக்கும் கங்கனா, அதைதான் குறிப்பிட்டதாக சமாளித்து வருகிறார்.

error: Content is protected !!