news

News April 6, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 127
▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
▶விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையெனில், அவர் சொல்லும் சொல் மற்றவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

News April 6, 2024

14 இடங்களில் சதம் அடித்த வெயில்

image

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர்-41.5, சேலம்-41.2, தருமபுரி-41, ஈரோடு-41.2, மதுரை, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், திருச்சி- 40, திருத்தணி-39.3, தஞ்சை-39, கோவை-39.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 6, 2024

ரம்மி நிறுவனத்துடன் பணம் வாங்கிய கட்சி திமுக

image

நடிகர் திலகம் உயிருடன் இருந்திருந்தால், ஸ்டாலின் நடிப்பைப் பார்த்து மயங்கி விழுந்திருப்பார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் கொண்டு வந்தத் திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?. இடத்தைச் சொல்லுங்கள். நானே வருகிறேன். ஆன்லைன் ரம்மி நிறுவனத்துடன் கூட பணம் வாங்கிய கட்சி திமுக” என கடுமையாக சாடியுள்ளார்.

News April 6, 2024

IPL: ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அபிஷேக்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர், பவர் பிளே ஓவர்களில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் விளாசி அசத்தினார். 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்த இவர், தீபக் சாகர் வீசிய பந்தில் அவுட்டானார். மும்பைக்கு எதிரான போட்டியில் 63(23) ரன்கள் குவித்து, முதல் ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

News April 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 6, 2024

பிரதமர் மோடி நடிகரை போல வலம் வருகிறார்

image

300 படங்களுக்கு மேல் நடித்த நான் திமுக தொண்டனாக உங்கள் முன் நிற்கிறேன். ஆனால் பிரதமர் மோடி, நடிகர் போல் வலம் வந்து கொண்டிருக்கிறார் என நடிகர் வாகை சந்திரசேகர் விமர்சித்துள்ளார். சிவகாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. சர்வாதிகார ஆட்சி தான் நடக்கும்” எனத் தெரிவித்தார்.

News April 6, 2024

காதலர்களை கட்டிப்போட்டு கொடூரம்

image

காதலர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பெண்கள், தங்கள் காதலர்களுடன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த 6 இளைஞர்கள் காதல் ஜோடிகளை மிரட்டி பைக்கில் அழைத்துச் சென்று, காதலர்கள் கண் முன்னே பெண்களை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் மூவரை கைது செய்துள்ளார்.

News April 6, 2024

இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பாஜக

image

அரசு பணிகளில் இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டிய நிலைக்கு பாஜக அரசு தள்ளி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக அரசு அப்படி இல்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவார். நம் நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

News April 6, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News April 6, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

▶மக்களவைத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர்: இபிஎஸ்
▶அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
▶மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது
▶வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியை உறுதி செய்ய வேண்டும்: சத்ய பிரதா சாகு
▶தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது மீண்டும் வழக்குப் பதிவு
▶நடிகை சுமலதா பாஜகவில் இணைந்தார்

error: Content is protected !!