news

News April 6, 2024

பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்க்கும் திமுக

image

பழனியில் ஆதி திராவிட மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை, தமிழகம் முழுவதுமே ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மோசமான நிலையில் தான் உள்ளன. உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, பள்ளிக் குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

News April 6, 2024

இதை செய்தால் சனி தோஷம் நிச்சயம் விலகும்

image

ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். இந்த தோஷத்தை கீழ்காணும் வழிகளில், நீக்க முடியும் என்பது ஐதீகம் *தினமும் காலையில் எழுந்து நீராடி, சனிபகவானின் வாகனமான காக்கைகளுக்கு உணவிடுதல் * சனிக்கிழமை தோறும் சனிபகவான் சன்னிதியில் எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி வழிபடுதல் * அனுமன், விநாயகர், கால பைரவரை வழிபடுதல் மூலம் சனி தோஷம் விலகும் என நம்பப்படுகிறது

News April 6, 2024

இரவில் தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

image

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரிகள் 2 பேர், தங்களது காதலர்களுடன் ஒன்றாக கோயில் திருவிழாவுக்கு சென்றுள்ளனர். திரும்பும் வழியில் பைக்கில் வந்த 4 பேர், காதலர்களை கட்டிப்போட்டு, 2 பெண்களையும் இரவு முழுக்க பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 6, 2024

இப்போதே வருமான வரி தாக்கல் செய்யலாம்

image

2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரிக் கணக்கை (ITR) ஏப்.1 முதலே தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தான் IT போர்ட்டலில் தாக்கல் செய்ய முடிந்தது. இந்நிலையில், பெரும்பாலான வரி செலுத்துவோரால் பயன்படுத்தப்படும் ITR-1, 2, 4 ஆகிய படிவங்கள் தற்போது உள்ளீடு செய்யப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் தற்போதே IT தாக்கல் செய்யலாம்.

News April 6, 2024

ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா

image

காசாவில் தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் 4 தீர்மானங்களை கொண்டு வந்தது. அதில் காசாவில் மனித உரிமை மீறலில் இஸ்ரேல் ஈடுபட்டிருப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்களை ஆதரித்த இந்தியா, தாக்குதலை நிறுத்தக்கோரும் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தது.

News April 6, 2024

2 மூலவர்களை கொண்ட நெல்லையப்பர் கோயில்

image

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில். மிகப்பெரிய கோபுரம், சன்னிதி, தெப்பக்குளம் என பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. பொதுவாக கோயிலில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இக்கோயிலில் 2 மூலவர்கள் உள்ளனர். அதில் லிங்க வடிவில் இருப்பவர் நெல்லையப்பர் எனவும், சயன கோலத்தில் இருப்பவர் கோவிந்தராஜர் எனவும் வணங்கப்படுகிறார்.

News April 6, 2024

ரொனால்டோ அணி மீண்டும் வெற்றி

image

சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில், ரொனால்டோவின் அல்-நாசர் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ‘டமாக்’ அணிக்கு எதிரான இப்போட்டி, தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் பாதியில், இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2ஆவது பாதியிலும் கோல் அடிக்காததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது, அல்-நாசர் அணி வீரர் ‘அய்மெரிக் லபோர்ட்’ அபாரமாக கோல் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

News April 6, 2024

பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை கொல்வோம்

image

பாகிஸ்தானிற்குள் புகுந்து தீவிரவாதிகளை, இந்தியா கொல்லும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க விரும்பினாலோ, அல்லது தாக்குதல்களை நடத்த முயற்சித்தாலோ தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். இந்தியாவில் தாக்குதல் நடத்திவிட்டு பாகிஸ்தானிற்குள் தப்பிச் செல்லும் தீவிரவாதிகளை அந்நாட்டிற்குள் புகுந்து இந்தியா கொல்லும் என்றும் அவர் கூறினார்.

News April 6, 2024

10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்

image

நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என செல்லூர் கே.ராஜூ கிண்டலாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலையும், பிரதமர் மோடியும் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று இப்போது வந்து சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டு காலம் இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆட்சியில் பாஜக என்ன செய்து கொண்டு இருந்தது” எனக் கேள்வி எழுப்பினார்.

News April 6, 2024

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்

image

இந்தியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு 11.01 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில், பூமியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. பின், ராஜஸ்தானில் நள்ளிரவு 1.29 மணிக்கு 3.7 ரிக்டர் அளவில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

error: Content is protected !!