news

News April 6, 2024

ஜே.பி நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி

image

திருச்சியில் நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பேரணிக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். காந்தி மார்க்கெட்டில் இருந்து பெரியகடை வீதி வழியாக மலைக்கோட்டை வரை வாகன பேரணிக்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர். முன்னதாக, வாகன பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்ட பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் போலீசார் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தனர்.

News April 6, 2024

புத்திசாலித்தனமாக தங்கையை பாதுகாத்த சிறுமி

image

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் அலெக்ஸா கருவியின் உதவியுடன் தப்பித்துள்ளனர். நிகிதா என்ற சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த குரங்குகள், சமயலறையில் இருந்த பொருட்களை அங்கும் இங்குமாக வீசத் தொடங்கியுள்ளன. இதனால் சிறுமியின் தங்கை பயந்துபோன நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்த நிகிதா, அலக்ஸாவை குரைக்கக் கூறியுள்ளார். அலக்ஸாவில் இருந்து வந்த நாயின் சத்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளன.

News April 6, 2024

இதனால் தான் பாஜகவில் இருந்து விலகினோம்

image

தொண்டர்களின் விருப்பப்படியே பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருச்சி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல, வாக்களித்த மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். ஆட்சி முக்கியம் என நினைத்திருந்தால் பாஜக கூட்டணியில் நிலைத்திருப்போம் என்றார். மேலும், அதிமுகவை உடைக்க, சின்னத்தை முடக்க சிலர் முயற்சி செய்தனர் என ஓபிஎஸ்ஸையும் தாக்கிப் பேசியுள்ளார்.

News April 6, 2024

முக்கிய புள்ளிகளின் வெற்றியை பாதிக்கும் சுயேட்சைகள்?

image

சுயேட்சை வேட்பாளர்கள் சில சமயங்களில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் தோற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருமாவளவன் என்ற சுயேட்சை 289 வாக்குகள் பெற்றிருந்தார். இதேபோல இந்த தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து 6 பன்னீர்செல்வங்களும், ஜோதிமணியை எதிர்த்து 2 ஜோதிமணிகளும், ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து 6 சண்முகங்களும் களம் இறங்கியுள்ளனர்.

News April 6, 2024

மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படாது

image

எத்தனால் உற்பத்திக்காக மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்பட மாட்டாது என்று மத்திய உணவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். எத்தனால் உற்பத்திக்காக, கடந்த ஆண்டு ஜூலை முதல் அரிசி வழங்கப்படவில்லை. உள்நாட்டு உற்பத்தி, சில்லரை விலை உயர்வு, பொருளாதார நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால் எத்தனால் உற்பத்தியாளர்களுக்கு அரசிடமிருந்து அரிசி விற்பனை நிறுத்தப்பட்டது.

News April 6, 2024

‘டி3’ பட இயக்குநருக்கு சிறை தண்டனை

image

‘டி3’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட அப்படத்தின் இயக்குநர் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. கடனாக பெற்ற ரூ.4 கோடிக்கு பதிலாக படத்தின் உரிமையில் 60% தருவதாக சாமுவேல் என்பவருடன் தயாரிப்பாளர் மனோஜ் ஒப்பந்தம் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட குற்றத்திற்காக இயக்குநருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிகிறது

image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து சமூகத்தை பிரிக்க நினைப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாகிஸ்தான் தேர்தலுக்கான வாக்குறுதிகள் போல தெரிவதாக கூறிய அவர், மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் காங்கிரசின் மோசமான அரசியலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். தேசத்திற்காக பாஜக உழைப்பதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் பாஜகவில் இணைய விரும்புவதாக தெரிவித்தார்.

News April 6, 2024

பி.ஏ.பி., கால்வாயில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பி.ஏ.பி., பாசன கால்வாயில் குளித்த சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கால்வாயில் குளிக்கச் சென்ற திருப்பூரை சேர்ந்த சந்தோஷ், வீணா, ப்ரீத்தா ஆகியோர் வீடு திரும்பவில்லை. இன்று தேவனாம்பாளையம் அருகே 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 3 பேரின் உடல்களை மீட்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2024

இது நீதியை விரும்பும் தேசத்தின் குரல்…

image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது வாக்குறுதிகளின் பட்டியல் மட்டுமல்ல, அது நீதியை விரும்பும் தேசத்தின் குரல் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பதற்காக வாக்களிக்க வேண்டும் என்றார். ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. வாக்கு இயந்திரங்கள் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

News April 6, 2024

8% வளர்ச்சி கணிப்பை ஏற்க IMF மறுப்பு

image

2047 வரை இந்தியா பொருளாதாரம் ஆண்டுக்கு 8% வளர்ச்சி அடையும் எனக் கூறிய நிதி ஆலோசகர் சுப்ரமணியன் கணிப்பை ஏற்க IMF மறுத்துள்ளது. இது குறித்து பேசிய IMF செய்தித் தொடர்பாளர் ஜூலி கோசாக், “பன்னாட்டு நிதியத்தின் இந்திய பிரதிநிதியாக சுப்ரமணியன் தெரிவித்த கணிப்புகள், முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து. நிதியத்தின் ஊழியர்களின் பணிகளிலிருந்து பிரதிநிதிகளது பணிகள் மாறுபடும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!