news

News November 2, 2025

3-வது T20: இந்தியா பவுலிங்.. அணியில் 3 மாற்றங்கள்!

image

ஓவல் மைதானத்தில் நடக்கும் 3-வது T20-யில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஞ்சு, ராணா, குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர். பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.

News November 2, 2025

SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு!

image

தேர்தல் ஆணையம் SIR-ஐ திரும்ப பெறவில்லை என்றால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், SIR-ஐ ஏற்க முடியாது எனவும், இது வாக்குரிமைக்கு எதிரானது, சட்டவிரோதமானது எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

News November 2, 2025

SIR-ஐ கடுமையாக எதிர்க்க வேண்டும்: திருமா

image

வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளதாக SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திருமா தெரிவித்துள்ளார். அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென அனைத்து கட்சிகளிடமும் வலியுறுத்தினார்.

News November 2, 2025

இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

image

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?

News November 2, 2025

கரூரில் வியாபாரிகளை விசாரிக்கும் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2 நாள்களாக விஜய் பேசிய இடத்தை அளவீடு செய்தனர். 3-வது நாளான இன்று வேலுச்சாமிபுரத்தில் உள்ள வியாபாரிகள் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களுக்கு ஏற்கெனவே CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று ஆஜராகினர். 8 பேரிடம் சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

News November 2, 2025

BREAKING: SIR-ஆல் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து

image

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News November 2, 2025

டாப் 10: இந்தியாவின் அசுத்தமான நகரங்கள்!

image

சுத்தம் சோறு போடும் என ஸ்கூல் படிக்கும் போதே சொல்லி கொடுத்தாலும், வளர்ந்த பிறகு அதை மறந்துவிடுகிறோம். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 அசுத்தமான நகரங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கம் Swipe செய்து, எந்த நகரம் டாப்பில் இருக்கிறது என பாருங்க. சாக்லெட் கவரை ரோட்டில் வீசிபவருக்கு, ஊரே குப்பையா இருக்கு என குறைசொல்ல அருகதை இல்லை. மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம்

News November 2, 2025

மாறி மாறி வரப்போகும் வெயில், மழை!

image

பருவமழை, புயலால் TN-ல் தொடர் மழை இருந்தது. ஆனால், ‘Montha’ புயல் கரையை கடந்தபோது, கிழக்கு திசை காற்றை இழுத்து சென்றது. இதனால், TN-ல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த ஒருவாரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், நவ.8 வரை இரவில் மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

நடிகை அர்ச்சனா தற்கொலையா? CLARITY

image

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

News November 2, 2025

SIR-ஆல் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல்: CM ஸ்டாலின்

image

SIR குறித்த அனைத்து கட்சி கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் பேசிய CM, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக கடமையாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதாக தெரிவித்தார். ஏப்ரலில் தேர்தலை வைத்துகொண்டு தற்போது SIR பணிகளை செய்வது சரியானது அல்ல எனவும், இதனால் வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!