India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐபிஎல் டிக்கெட் விற்பதற்காக போலி இணையதளம் உருவாக்கி ரசிகர்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை, ஐதராபாத் ஆகிய இரு இடங்களில் நடந்த லீக் போட்டிகளை வீரர்கள் அருகே இருந்து பார்க்கலாம் என்றும் தள்ளுபடி விலையிலான டிக்கெட் என்றும் விளம்பரப்படுத்தி இந்த இணைய மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் தமிழகத்தின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை என டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி மீது பாஜக புகார் அளித்தால் 12 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், பாஜக மீது ஆம் ஆத்மி புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றார். பாஜகவின் ஆயுதமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், உரிய நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானிடம் பெங்களூரு தோல்வியடைய தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பாததே காரணம் என்று மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். பெங்களூரு தோல்விக்கு கோலி மெதுவாக சதம் அடித்ததே காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெய்டன் அளித்த பேட்டியில், தோல்விக்கு கோலி காரணம் கிடையாது, கார்த்திக்கை முன்கூட்டி களமிறக்காகதே காரணமென்று தெரிவித்துள்ளார்.

பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என நடிகர் ரஞ்சித் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, மகிழ்ச்சியாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அடுத்தவரை பாதிக்காத அளவில் இருந்தால் போதுமானது என்றார். பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பார்க்க முடியாவிட்டால் கண்களை மூடிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மே.வங்கத்தில் NIA அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. குண்டுவெடிப்பு வழக்கில் 2 TMC தொண்டர்களை சனிக்கிழமை NIA கைது செய்தது. அப்போது NIA வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து NIA புகார் அளித்த நிலையில், கைதான நபர்களின் குடும்பத்தினரும் புகார் அளித்தனர். அதன்பேரில், பெண்ணை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டி கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது விரலை வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அருண் வர்னேகர் என்ற அந்த நபர், காளிதேவி முன்பு வேண்டிக் கொண்டு இடதுகையில் உள்ள ஆள்காட்டி விரலை வெட்டியுள்ளார். அந்த ரத்தத்தில் வீட்டு சுவரில், மோடியை காளிதேவி காக்க வேண்டுமெனவும் எழுதி வைத்துள்ளார். ஏற்கெனவே அவர் மோடிக்கு தனது வீட்டில் கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அரியலூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாக கூறினார். மேலும், திமுகவும், காங்கிரசும் சனாதன பண்பாட்டை ஒழிக்க முயற்சிப்பதாகவும், தமிழை எப்படி ஒழிப்பது, அவமானப்படுத்துவது என சிந்திப்பதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டினார்.

இந்தியாவில் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களின் சேவை மையம் என்ற பெயர்களில் இணையதளங்களைத் தொடங்கி பண மோசடி செய்வோர் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூகுளில் சேவை மையங்களைத் தேடும்போது, அவை அதிகாரப்பூர்வ இணையதளம் தானா? என உறுதி செய்த பிறகே அதனை தளத்தை பயன்படுத்தவும், இல்லையென்றால் கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளைப் போக வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மேலும் பல கோடி ரூபாயை, பாஜகவினர் பதுக்கி வைத்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. அதில், தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாது, பிற பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.