India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்பவர்தான் அம்மா. டெல்லியில் ஒரு தாய், தனது மகனுக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்துள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேஷுக்கு, 80 வயதான தாய் தர்ஷனா ஜெயின், தனது சிறுநீரகத்தை தானம் செய்து மறுவாழ்வு அளித்துள்ளார். தாயும், தானும் நலமுடன் இருப்பதாக ராஜேஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அம்மா எப்பவுமே கிரேட் தான்!
ரோஜாக் கூட்டம், பூ, பிச்சைக்காரன் என தனித்துவமான படைப்புகளால் தனியே தெரியும் சினிமா இயக்குநர்களில் ஒருவர் சசி. மண்மணம் சார்ந்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் சசிக்குமார். இருவரும் புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ‘லப்பர் பந்து’ நாயகி ஸ்வாசிகா நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு அடுத்த மாதம் கள்ளக்குறிச்சியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை என விமர்சித்துள்ளார். கரும்புக்கு ஊக்கத் தொகை போன்ற அறிவிப்புகள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருக்கிறது. கடந்த காலங்களை போல நடப்பு பட்ஜெட்டும் வளர்ச்சியை தராது என கூறியுள்ளார்.
யார் எந்த மொழியில் பேசினாலும், அதை குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டுமே கேட்கும் வகையில் ஏர்பாட்ஸ்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக இந்தாண்டு இறுதியில் ஏர்பாட்ஸ் சாப்ட்வேர் அப்டேட்டுகளை கொடுக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை செய்ததும் பிறர் எந்த மொழியில் போனில் பேசினாலும், அதை நாம் விரும்பும் மொழியில் கேட்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதை பின்பற்றி, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைத்தன. இந்நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப ஏப்ரல், ஜூன், அக்டோபரில் தலா 0.25 புள்ளிகள் என 0.75 புள்ளிகள் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அப்படி குறைத்தால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி மேலும் குறையக்கூடும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனதை முன்னிட்டு திமுக MLAக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துரை முருகன், பெரிய கருப்பன், நேரு ஆகிய முன்னணி அமைச்சர்கள் மட்டும் பச்சைத்துண்டு அணியவில்லை. இதனை சோசியல் மீடியாவில் பகிரும் எதிர்க்கட்சியினர் தாங்களும் பச்சைத்துண்டு போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என பவன் கல்யாண் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். ‘இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதற்காக 1968-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பவன் பிறந்திருக்கவே மாட்டார்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தவெகவின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த சஜி காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் X போஸ்ட் செய்துள்ளார். என் மீதும் கழகத்தின் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்று சஜியை பாராட்டியிருக்கும் விஜய், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சஜி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் சினிமாக்களை மட்டும் இந்தியில் டப் செய்யலாமா? என பவன் கல்யாண் கேட்ட கேள்விக்கு, கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். மொழித் தடைகளை கடந்து திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் தங்களுக்கு உதவுவதாக கனிமொழி தெரிவித்தார். மேலும், பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன் ‘GO BACK HINDI’ என பவன் கல்யாண் போட்ட பதிவையும், தனது பதிலடிக்கு கீழே கனிமொழி பகிர்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.