news

News April 27, 2025

பிறந்த குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை

image

பிறந்தது முதல் சுறுசுறுப்பாக கைகால்களை உதைத்து, தவழ்ந்து கொண்டு இருக்கும் குழந்தைகள் வளரும்போது இயல்பான எடையுடன் இருக்கின்றன; ஆனால் கொஞ்சம் சோம்பலான குழந்தைகள் வளரும் போது உடல்பருமன் அதிகரிக்கிறது என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள். பெற்றோர்களே கவனம், குழந்தைக்கும் உடற்பயிற்சி தேவை!

News April 27, 2025

அரசு முடிவு: பெண்களுக்கு சூப்பர் ஹேப்பி நியூஸ்!

image

2026 தேர்தலில் பெண்கள் வாக்குகளை கவரும் வகையில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, திமுக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், அது ஏழை பெண்களுக்கு பெருத்த உதவியாக இருக்கும். அதனால் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என அரசு யோசித்து வருகிறது.

News April 27, 2025

சித்திரை அமாவாசை: பித்ரு தோஷம் நீங்க இதை செய்யுங்க..!

image

இன்று வைசாக அமாவசை எனப்படும் சித்திரை அமாவாசை. பித்ரு தோஷம் நீங்க சில பரிகாரங்களை செய்யலாம். அரச மரத்திற்கு பூக்கள் சமர்பித்து, உங்கள் முன்னோர்களை நினைத்து ‘ஓம் பித்ருப்ய: நமஹ’ என்று சொல்லுங்கள். சூரிய பகவானுக்கு நீர் சமர்பித்து வழிபடலாம். தெற்கு திசை நோக்கி உங்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர்களின் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி அவர்களின் ஆசியை வேண்டுங்கள்.

News April 27, 2025

170 சீட் உறுதி.. வியூகம் வகுக்கும் இபிஎஸ்!

image

2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் இபிஎஸ் தெளிவாக உள்ளார். எனவே, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் தான், ADMK 150, BJP 40, பிற கூட்டணி கட்சிகளுக்கு 34 தொகுதிகள் என்ற பாஜகவின் கணக்கிற்கு அவர் உடன்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த முறை ஆட்சியை பிடிப்பதில் அவர் உறுதியாக உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

News April 27, 2025

இந்தியாவிற்கு எதிராக போர் அறிவிப்பு

image

பாக். ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரில் ஆயுதப்போராட்டத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும் எனவும், காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும் என்றும் கூறியுள்ளது.

News April 27, 2025

வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீங்க..

image

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இயல்பை விட இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்

News April 27, 2025

உலக ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ரிலையன்ஸ்

image

நிகர மதிப்பின் அடிப்படையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க 25 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் இணைந்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, $118 பில்லியன் நிகர மதிப்புடன் ரிலையன்ஸ் 21ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாஃப்ட், அலிபாபா, ஆல்பாபெட் உள்ளிட்ட உலகளாவிய ஜாம்பவான் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும், இதன் சந்தை மூலம் $140 பில்லியனாக உயர்ந்துள்ளது.

News April 27, 2025

₹1,000 கோடியை கொட்டினாலும் அது ஈசி இல்லை: நானி

image

₹1,000 கோடி போட்டு படம் பண்ணினாலும், ‘மெய்யழகன்’ படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது அவ்வளவு எளிதல்ல என நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் ஆடிப்போய் விட்டதாகவும், நடிகர் கார்த்தியிடம் நிறைய பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் பிரேம் குமாரின் இந்த படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

image

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.

News April 27, 2025

PAK-க்கு ஆதரவாக பேசிய இந்தியர்கள்!

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயாவில் மட்டும் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MLA, செய்தியாளர், மாணவர்கள், வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கைதுக்கு உள்ளாகியுள்ளனர்.

error: Content is protected !!