India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கக்குவான் இருமல் நோய் பரவல் காரணமாக சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. போர்டெடெல்லா பெர்டுசிஸ் என்ற தொற்றுக்கிருமியின் வாயிலாக பரவும் இருமல், பெரும்பாலும் குழந்தைகளையே தாக்குகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது கடினம். தொற்று தீவிரமடைந்த பின், உயிரிழப்பு ஏற்படவும் சாத்தியம் உள்ளது. பெர்டுசிஸால் சீனாவில் 32,380 பேர் பாதிக்கப்பட்டும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்கள், சீனாவுக்கு வர பாஸ்போர்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அருணாச்சல பிரதேசம் சென்று சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன் என சீமான் விரக்தியுடன் பேசியுள்ளார். ஆரணியில் நாதக வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “கத்தி கத்தி போராடிவிட்டேன். மாற்றம் ஏற்படவில்லை. பாஸ்போர்ட் இருந்தால், எனது 2 பிள்ளைகள், மனைவியுடன் வெளிநாட்டுக்கு சென்றிருப்பேன்” என்றார்.

ஜெயங்கொண்டம் அருகே வளவனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜா வெளிநாட்டில் பணி செய்து வருகிறார். அவருடைய மனைவி பானுமதி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களாக வீடு பூட்டிக் கிடந்தது கண்டு சந்தேகமடைந்த அடுத்த வீட்டினர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, 4 பேரும் இறந்து கிடந்தனர். கொலையா தற்கொலையா என்று விசாரணை நடக்கிறது.

ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து டாக்ஸி ஓட்டுபவர்கள் இனி ஏசி போட மாட்டோம் என்று முடிவு செய்திருக்கின்றனர். சென்னை நகருக்குள் வாகனம் ஓட்ட கிலோ மீட்டருக்கு சராசரியாக ₹16 முதல் ₹18 செலவாவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர். ஆனால், ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்கள் ₹12 மட்டுமே கொடுப்பதால் நஷ்டம் ஏற்படுவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாமென இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஏப்.1இல் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஓரிரு நாட்களில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மத்திய அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பின் அண்ணாமலை ஆடு மேய்க்க செல்வார் என அதிமுக அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா விமர்சித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் போட்டி. அண்ணாமலை மத்தியில் இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் மிரட்டுகிறார். வரும் தேர்தலில் பாஜக 5ஆவது இடத்திற்கு செல்லும். அதன்பின் அண்ணாமலை ஆடு மேய்க்க செல்வார் என கூறியுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167/7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஆயுஷ் பதோனி 55*, கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DC தரப்பில் அபாரமாக பவுலிங் செய்த குல்தீப் 3, கலீல் அஹமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

வாரணாசி காசி விஸ்வநாதன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகளை போல காவி உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், சமூக விரோதிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஆனால், பக்தர்களின் மன நிறைவுக்காகவே இந்த உடை அளிக்கப்பட்டுள்ளதாக வாரணாசி காவல் ஆணையர் பதில் அளித்துள்ளார்.

பேஸ்புக்கில் கடந்த ஆண்டு ‘ரஷ்யாவில் செக்யூரிட்டி வேலை வாய்ப்பு’ என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை பார்த்த கேரளாவைச் சேர்ந்த டேவிட் என்ற இளைஞர் அப்பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய மதிப்பில் மாதம் ரூ.1.82 லட்சம் சம்பளம் தருவதாக அழைத்துச் சென்ற அவர்கள், கிழக்கு உக்ரைன் பகுதியில் போர்முனையில் சண்டையிட வைத்துள்ளனர். பல சோதனைகளை கடந்து அந்த இளைஞர் இந்தியா வந்து சேர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசிக்கக்கூட இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். விரைவில் அவர் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையடுத்து அவரது ஓய்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு பதிலளித்திருக்கும் ரோஹித், “எனது பேட்டிங் ஃபார்ம் தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இது இன்னும் சில ஆண்டுகள் தொடர வேண்டும்” என்று கூறியுள்ளார்
Sorry, no posts matched your criteria.