India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை செளந்தரராஜன் தென் சென்னை, எல்.முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த 5 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக தீவிரமாக பணியாற்றுகிறது.

₹50 கோடி தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம் பேசியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ஒரே ஆண்டில் தமது அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது என்றார். காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ₹50 கோடி தருவதாக பாஜக பேசியதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும் சித்தராமையா குறிப்பிட்டார்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி அல்லது நீங்கள் அடையும் வெற்றியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், என்னை விட அழகான மற்றும் திறமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இந்த சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். அதற்கு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருப்பேன் எனக் கூறினார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1,000-லிருந்து ரூ.1,500ஆகவும், ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ.600க்கும், கனகாம்பரம் மற்றும் முல்லைப்பூ கிலோ ரூ.700, செவ்வந்திப்பூ ரூ.450, அரளி மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2024 CUET PG தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நடத்தப்படும் CUET PG தேர்வு, மார்ச் 11 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை சுமார் 4.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். மாணவர்கள் <

2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி தோல்வியடைந்தது. இதையடுத்து 2019 தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. கடந்த 2 தேர்தல் முடிவுகளை காண்கையில் அதிமுக, திமுக கூட்டணி மாறிமாறி அமோக வெற்றி பெற்றது தெரியும். இந்தத் தேர்தலில், அதே வரலாறு திரும்புமா என்பதை மக்களே அறிவர்.

முதல்வர் ஸ்டாலின் வியூகம் மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது என்று விசிக தலைவர் திருமா தெரிவித்துள்ளார். தமிழ் பிடிக்கும் இட்லி பிடிக்கும் என்ற மோடியின் நாடகம் திமுகவுக்கு செக் வைப்பதற்காகவே; ஆனால், திமுக தேர்தல் நேரக் கட்சியல்ல, தமிழ் இனத்தின் காப்பாளர், தேசத்தை காப்பாற்றும் கட்சி. மோடியின் வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது. நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக விமர்சித்தார்.

தேர்தலுக்கு முந்தைய நாள் (ஏப்.18) அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்.19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், ஏப்.17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்க www.tnstc.in தளத்தில் தற்போதே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது, தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக தினகரனே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்; திமுக குடும்பத்திடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என்றால் தேனியில் அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கூறிய அவர், திமுகவினர் தரும் பணம் கஞ்சா விற்ற பணம்; அதை வேண்டாம் என்று சொல்லுங்கள். அதை வாங்கினால் மிகப்பெரிய பாவம் என்று தெரிவித்தார்.

ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தீபாவளியையொட்டி, அக்டோபர் இறுதியில் இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, படத்தின் டீசர் நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.