news

News March 15, 2025

மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.

News March 15, 2025

CT வெற்றிக்கு மூவரே காரணம்: ரிக்கி பாண்டிங்

image

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்‌ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

போர் நிறுத்தம்: PM மோடிக்கு நன்றி கூறிய புதின்

image

போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

அதிகரிக்கும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள்!

image

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க அறிவிப்பு வெளியான நிலையில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோர் புதிதாக திருமணமானவர்கள், கடந்த முறை நில அளவு பிரச்னைகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ₹1,000 உரிமைத்தொகை பெற தகுதிகளை மறுவரையறை செய்து, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளது. உங்கள் குடும்பத்தில் ₹1,000 வருகிறதா?

News March 15, 2025

4 ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி சேர்ப்பு

image

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி வரும் மே 11ஆம் தேதி முதல் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே(SR) அறிவித்துள்ளது. மதுரை – சென்னை எக்மோர் – மதுரை வைகை (12635/12636) மற்றும் சென்னை எக்மோர்- காரைக்குடி – எக்மோர் (12605/12606) ஆகிய 4 ரயில்களில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த அறிவிப்பு தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

News March 15, 2025

MLAக்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்: சிவகுமார்

image

பெங்களூருவில் டிராஃபிக்கிற்கு அடுத்தபடியாக குப்பைகளை அகற்றுவது சவாலாகவுள்ளது. இது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், MLAக்கள் தான் காரணம் என குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் Dy CM சிவகுமார். திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தை மிகப்பெரிய மாஃபியா கும்பல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதற்கேற்றபடி எம்எல்ஏக்களும் ₹800 கோடி வரை கேட்டு அரசை பிளாக்மெயில் செய்வதாக சாடியுள்ளார்.

News March 15, 2025

தனுஷ்கோடியில் பூநாரை சரணாலயம் ஏன்?

image

பூநாரை என தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் வரை தனுஷ்கோடிக்கு அதிக அளவில் வலசை வருகின்றன. சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். பல்லுயிர்ப் பெருக்கம் நன்றாக உள்ள இடங்களையே இவை பெரும்பாலும் வலசைக்கு தேர்ந்தெடுக்கும். இதைக் கருத்தில் கொண்டே தனுஷ்கோடியை பூநாரை சரணாலயமாக மாற்ற பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

News March 15, 2025

₹2,000 போதும்.. மாதம் முழுவதும் ஏசி பஸ்களில் ப்ரீ

image

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 630 வழித்தடங்களில் 3,056 பஸ்களை MTC இயக்குகிறது. இதில் நாள்தோறும் 32 லட்சம் பேர் பயணிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. தற்போது இந்த பஸ்களில் ₹1,000 பாஸ் இருந்தால், ஒரு மாதத்திற்கு பயணிக்கலாம். ஆனால் ஏசி பஸ்களில் செல்ல முடியாது. இதை கருத்தில் கொண்டு, ஏசி உள்ளிட்ட அனைத்து பஸ்களிலும் பயணிக்க ₹2,000 பாஸை விரைவில் MTC அறிமுகம் செய்யவுள்ளது.

News March 15, 2025

IND கிரிக்கெட்டின் ஒரு அங்கம் ஐபிஎல்: தினேஷ் கார்த்திக்

image

IPL இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். வீரர்களுக்குள் இருக்கும் வெற்றிக்கான மனநிலையை இத்தொடர் வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இதில் கிடைக்கும் பொருளாதார பலன்கள் கிரிக்கெட்டை மேம்படுத்த உதவுவதாகவும் தெரிவித்துள்ளார். IND கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக IPL இருப்பதால், ஒரே நேரத்தில் 3 அணிகளை இந்தியாவுக்காக விளையாட வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

TNPSC குரூப்-1 மெயின்ஸ் தேர்வு முடிவு வெளியீடு

image

கடந்தாண்டு டிசம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்ற TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கு இத்தேர்வானது நடத்தப்பட்டது. இதில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ள 193 தேர்வர்களின் பட்டியல் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!