news

News April 14, 2024

ஏப்ரல் 14 வரலாற்றில் இன்று!

image

*1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். *1699 – கால்சா அறப்படை இயக்கத்தை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1891 – பாபா சாஹேப் அம்பேத்கர் பிறந்த நாள். *1912 – வட அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்திற்குள்ளானது. *1950 – ஆன்மிக குரு ரமண மகரிஷி மறைந்த நாள். *2003 – மனித மரபணுத்தொகை ஆராய்ச்சி திட்டம் நிறைவடைந்தது.

News April 14, 2024

உலகப்போர் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

image

இஸ்ரேல் – ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்தார்.

News April 14, 2024

விஜய் சேதுபதிக்கு அதில் உடன்பாடு இல்லை

image

‘சூது கவ்வும் – 2’ படம் எடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு விஷயத்தை கிளாசிக்காக செய்துவிட்டோம். அதை நாம் மீண்டும் தொந்தரவு செய்யக்கூடாது. சூது கவ்வும் படத்தின் 2ஆவது பாகத்தை எடுப்பதில் கருத்தியலாக அவருக்கு உடன்பாடு இல்லை” எனக் கூறினார்.

News April 14, 2024

5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

image

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

News April 14, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ எண்: 1
▶குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
▶பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) உலகம் அடிப்படையாக கொண்டிருக்கிறது.

News April 14, 2024

தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு மாற்றத்தை உருவாக்கும்

image

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக நாட்டில் அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், “வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத மிகப்பெரும் அச்சுறுத்தலில் இந்தியா உள்ளது. ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க தேசத்திற்கு வழி்காட்டக்கூடிய வகையில் தமிழக மக்களின் தீர்ப்பு இருக்கும்” என்றார்.

News April 14, 2024

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது!

image

மணிப்பூரில் மெய்தி & குகி இன மக்களுக்கு இடையே மீண்டும் மூண்ட மோதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்நவுபால் மாவட்டத்தில் உள்ள பெல்யாங் கிராமத்தில் நேற்று இந்த இரு பிரிவினருக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை மூண்டது. இதில், மெய்தி இனத்தைச் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

News April 14, 2024

புதிய ஜெர்சியில் களமிறங்கும் LSG அணி

image

KKR அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள 28ஆவது லீக் போட்டியில் LSG அணி புதிய ஜெர்சியில் களமிறங்க உள்ளது. LSG அணியின் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருக்கும் புகைப்படத்தை அந்த அணியின் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கால்பந்தாட்ட கிளப் அணியான மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஜெர்சியை பிரதிபலிக்க சிவப்பு & பச்சை நிறம் கலந்த வகையில், புதிய ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

News April 14, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 14, 2024

தோனியை ‘தல’ என்று அழைக்க இதுதான் காரணம்!

image

CSK அணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட முக்கிய காரணமாக இருப்பதால் தான் தோனியை எல்லோரும் ‘தல’ என அழைக்கின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். தோனி குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் பல நாடுகளில் இருந்து வரும் வீரர்களில் சிலர் விளையாடுவர், சிலர் பெஞ்சில் அமருவர். அவர்கள் அனைவரையும் டீமாக ஒன்றிணைத்தால் தான் கோப்பையை வெல்ல முடியும். இதனை செய்யக்கூடிய திறன் அவரிடம் உள்ளது” எனக் கூறினார்.

error: Content is protected !!