India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, வேளாண் துறையில் இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2ஆம் இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் 3ஆம் இடத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 15) சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,220க்கும், சவரன் ₹65,760க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில், சவரனுக்கு ₹1,440 அதிகரித்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
2025 – 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் நேரலை காட்சிகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக ₹42 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ₹2,000 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை போல், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவின் வாக்கு வங்கி எத்தனை சதவீதம் உயர்கிறது என்பதை விட, எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு திரைப்பிரபலங்கள் ஹோலி பண்டிகையை தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகைகள் ராசி கண்ணா, ஸ்ரீலீலா, பிரியங்கா சோப்ரா, தமன்னா, அதிதி மிஸ்திரி உள்ளிட்ட பலர் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்களை மேலே காணலாம். நீங்க ஹோலியை கொண்டாடுனீங்களா?
வாட்ஸ்அப்பில் CREATE EVENT என்ற வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வழக்கமாக குரூப் சாட்களில் மட்டுமே இருந்த இந்த வசதி, தற்போது பிரைவேட் சாட்களுக்கும் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனுடன் POLL DOCUMENT போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. ஆன்ட்ராய்டு, ஐபோன்களிலும் வந்துவிட்டது. உடனே உங்க ஃபோன எடுத்து வாட்ஸ் அப்ப செக் பண்ணிப் பாருங்க!
இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு கசியவிட்டதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றும் ரவீந்திரநாத் என்பவரை உ.பி போலீசார் கைது செய்தனர். பெண்களை வைத்து மயக்கும் ‘ஹனி டிராப்’ முறையில், இந்த ஊழியரிடமிருந்து ரகசியங்களை ஐ.எஸ்.ஐ., அமைப்பு பெற்றது அம்பலமாகி உள்ளது. ‘பேஸ்புக்’ வாயிலாக ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்ட நேஹா சர்மா என்ற பெண், இந்திய ராணுவ ரகசியங்களை பெற்றுள்ளார்.
அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த மார்ச் 30ஆம் தேதி வரை ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு கெடு விதித்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக JACTO-GEOவின் மூத்த தலைவர் மாயவன் கூறியுள்ளார். வரும் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ஹோலி கொண்டாட்டம் முடிந்து, ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். பத்தாம் வகுப்பு மாணவர்களான அவர்கள் ஆற்றில் குளித்தபோது, திடீரென நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதால் இந்த துயர சம்பவம் நேரிட்டது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு 4 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டன.
திபெத்தில் கடந்த 2 நாட்களில் 4 முறை நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் நேரிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ரிக்டர் அளவில் 3.5 முதல் 4.3 வரை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்றிரவு 12.49 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் 4 ஆவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டது. யுரேசியன் தட்டுப்பகுதியில் திபெத் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.