India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடைசி வரை போராடி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்வது இது 2ஆவது முறை ஆகும். 2020இல் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணி 226 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.

உ.பி.,யின் காசியாபாத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். உ.பி.,யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. I.N.D.I.A கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இருவரும் கூட்டாக பிரசாரம் செய்வது மேற்கு உ.பி.யில் உள்ள 13 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துமென காங்கிரஸ் நம்புகிறது.

மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக – ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். இதற்கிடையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்.19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, கடந்த 4 வாரங்களாக நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டியில் வெல்வது யாரென்பது ஜூன் 4இல் தெரியும்.

டெல்லி – குஜராத் அணிகளுக்கு இடையேயான 32ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் டெல்லி அணி ஒரு போட்டியிலும், குஜராத் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் GT- 6 மற்றும் DC- 9ஆவது இடங்களில் உள்ளன. இளம் கேப்டன்களை கொண்ட இரு அணிகளும் மோதவுள்ளதால், போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலுக்கு வரும். ஏப்ரல் 19ஆம் தேதி மாலை வாக்குப்பதிவு நடந்து முடியும் வரை திரைப்படம், வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாகவோ இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை நிகழ்ச்சி மூலமாகவோ யாரும் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது. இந்த விதிமுறையை மீறிபவர்களுக்கு சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ₹5,000 கிடைக்கும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ₹1,000, பெண்களுக்கு இலவச பேருந்து மூலம் மாதம் ₹2,000 மிச்சமாவதாகவும், முதியோர் உதவித்தொகை ₹1,200, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உங்களுக்கும் இத்தொகை கிடைக்கிறதா?

தமிழகம் முழுவதும் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் கூடுதலாக போலீஸாரும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

காங்கிரஸ், என்.சி., பி.டி.பி. ஆட்சியில் காஷ்மீரில் போலி என்கவுண்ட்டர்கள் நடைபெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். சம்பாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், காஷ்மீர் இளைஞர்களின் கையில் இந்த மூன்று கட்சிகள் தான் ஆயுதங்களைக் கொடுத்தன. ஆனால், மோடியோ காஷ்மீரின் வளர்ச்சிக்காக நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றார்.

✍அச்சம் என்பது தலைதூக்கி நிற்கும்வரை, நாம் அடிமையாகத்தான் வாழ வேண்டியிருக்கும்.
✍பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருப்பதே உண்மையான வீரமாகும். ✍நேர்மை, ஒழுக்கம் ஆகிய இரண்டும் அறத்தின் ஆணிவேராகும்.✍தேவைக்கு அதிகமாகி சேர்த்து வைக்கும் செல்வம் பயனற்றதாகிவிடும்.✍கற்கும் கல்வியால் மட்டுமே பிறப்பால் உருவான ஏற்றத்தாழ்வு மறையும்.✍துன்பத்தில் உழலும் பிறருக்கு மனமுவந்து உதவுபவர்களே வீடுபேறை அடைவர்.
Sorry, no posts matched your criteria.