news

News April 17, 2024

Apply Now: 3,712 காலிப் பணியிடங்கள்

image

2024 ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு மூலம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைப் பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செக்ரட்டரியேட் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>ssc.nic.in<<>> என்ற இணையத்தளத்தில் மே 9ஆம் தேதி இரவு 11 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 17, 2024

விவேக் நினைவு நாளில் மரக்கன்று நட்ட படக்குழு

image

நடிகர் விவேக்கின் நினைவு நாளை முன்னிட்டு, ‘வைபவ் 27’ படக்குழுவினர் மரக்கன்று நட்டுள்ளனர். நடிகர் என்பதை கடந்து, அப்துல் கலாமின் கோரிக்கையை ஏற்று மரக்கன்று நட்டு பூமியை பசுமையாக மாற்றும் பணியில் விவேக் ஈடுபட்டு வந்தார். அதனால் தான் அவர் ‘சின்ன கலைவாணர்’ என அழைக்கப்பட்டார். அவர் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

News April 17, 2024

தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு

image

சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான சாவடிகள் மற்றும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் – துணை இராணுவப் படையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

News April 17, 2024

2024இல் ‘மோடியின் கேரண்டி’

image

அனைவருடன் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரத்தைப் பின்பற்றும் கட்சி பாஜக என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அசாமில் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கூறினார். 2014இல் நம்பிக்கையையும், 2019இல் உறுதியான உணர்வையும் கொண்டு வந்ததாக கூறிய அவர், 2024இல் உத்தரவாதத்தை கொண்டு வருகிறேன், இது ‘மோடியின் கேரண்டி’ என்று தெரிவித்தார்.

News April 17, 2024

மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை தூக்கமில்லை: உதயநிதி

image

பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரையில் தூக்கமில்லை; இந்தத் தேர்தல் சுயமரியாதைக்காரர்களுக்கும், இரக்கமற்ற சர்வாதிகாரிகளுக்கு இடையே நடக்கும் போர் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். ஒருவேளை திருவள்ளுவர் இருந்து மோடி சொல்லும் திருக்குறளை எல்லாம் கேட்டிருந்தால் என்ன ஆவது? எனக் கிண்டல் செய்த அவர், ரோடு ஷோ செல்லும் மோடியை மக்கள் ரோட்டுக்குத்தான் அனுப்பப் போகிறார்கள் என்று கடுமையாகச் சாடினார்.

News April 17, 2024

IPL: அதிகபட்ச ரன் சேஸ்

image

▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 224 vs கொல்கத்தா (2024)
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 224 vs பஞ்சாப் (2020)
▶மும்பை இந்தியன்ஸ் – 219 vs சென்னை (2019)
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 217 vs ஹைதராபாத் (2010)
▶சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 217 vs ராஜஸ்தான் (2023)
▶மும்பை இந்தியன்ஸ் – 216 vs பஞ்சாப் (2023)
▶டெல்லி டேர்டெவில்ஸ் – 214 vs குஜராத் (2017)

News April 17, 2024

நிதிஷ் புறக்கணிக்கப்படுவது ஏன்? தேஜஸ்வி கேள்வி

image

மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு நிதிஷ்குமாரை ஏன் அழைக்கவில்லை என பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் பிரதமர் பங்கேற்கும் எந்த கூட்டத்துக்கும் நிதிஷை, பாஜக அழைப்பதில்லை. முதல்வர் மீது எனக்கு இன்னமும் மரியாதை உள்ளது. நிதிஷ் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்பதை பாஜக விளக்க வேண்டும் என்ற அவர், ஆர்ஜேடி-காங்கிரஸ் அணி முழுமையான வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News April 17, 2024

இறுதிக் கட்டத்தில் ‘ட்ரெயின்’ படப்பிடிப்பு

image

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. மிஸ்கின் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாதி நடித்துள்ளார். ரயில் பயணம் + திகில் கதைக்களத்தில் உருவாகும் இதில், விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைக்கும் மிஸ்கின், ஒருப் பாடலையும் பாடியுள்ளார்.

News April 17, 2024

நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு

image

நயினார் நாகேந்திரனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பிடிபட்டதில் நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்பு இருப்பதால் அவரைத் தகுதிநீக்கம் செய்து, ED விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

News April 17, 2024

மக்களவைத் தேர்தலும் அதிமுக பெற்ற வாக்குகளும்!

image

1977ஆம் ஆண்டு தனது முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக 30.04% (17) வாக்குகள் பெற்றது. மக்களவைத் தேர்தல் வாரியாக *1980 – 25.38% (2)*1984 (12), – 18.36% *1989 – 17.12% (11)*1991-18.1% (11)* 1996 – 7.84% (0)*1998 – 25.89% (18)*1999 -25.68% (10)* 2004 -29.77% (0)* 2009 – 22.88% (9)* 2014 -44.92% (37)* 2019 -19.39% (1) வாக்குகள் பெற்றுள்ளது. 2014இல் அதிகப்பட்சமாக 37 தொகுதிகளைப் கைப்பற்றியது.

error: Content is protected !!