India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஏப்ரல் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

தேசிய அளவில் காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவுதிறனில் (22,161 மெகாவாட்) தமிழ்நாடு 3ஆவது இடம்பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில், “மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 2,301 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் உள்ளன. சோலார் மின் உற்பத்தி நிறுவுதிறன் 8,211 மெகாவாட்டாக உள்ளது. சர்க்கரை ஆலைகளில் நிறுவுதிறன் 1,045 மெகாவாட்டாக உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.

தோல்வி பயத்தால் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு ராகுல் காந்தி இடம்பெயர்ந்துள்ளார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டலாகக் கூறியுள்ளார். பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக ஆட்சியில் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் நிலைநிறுத்தப்பட்டது. அதனை உலகம் கண்டு வியந்தது. கடந்த 20 ஆண்டுகளாக ‘ராகுல்யான்’ எங்கும் ஏவப்படவோ, தரையிறங்கவோ இல்லை” என்றார்.

*அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பது – டெல்லி அமைச்சர் அதிஷி
*மக்களவைத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக அதிக வெற்றியைப் பெறும் – அமித் ஷா
*வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை – தேர்தல் ஆணையம்
*இந்தியாவில் வேலையின்மை மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளது – ரகுராம் ராஜன்
*PBKS அணிக்கு எதிரான 33ஆவது லீக் போட்டியில் MI அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று (ஏப்ரல் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

தீபிகா படுகோன் – ரன்வீர் ஜோடிக்கு 2018ஆம் ஆண்டு திருமணமான நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக தீபிகா அறிவித்தார். இந்நிலையில், ‘சிங்கம் அகெய்ன்’ படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரின் வயிற்றைப் பார்த்த நெட்டிசன்கள், அவர் வாடகைத் தாய் மூலமே குழந்தையைப் பெற்றெடுக்க இருப்பதாகச் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

PBKS-க்கு எதிரான ஆட்டத்தில் MI அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த MI அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 193 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய PBKS அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி வீழ்ந்தது.

பூமியின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடலின் வெப்பநிலை குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் அது ‘எல் நினோ’ எனப்படுகிறது. அதுவே, குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் குறைந்தால் அது ‘லா நினோ’ எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, ‘எல் நினோ’ காரணமாக இந்தியாவின் பருவமழை 6% குறைந்தது. நடப்பு ஆண்டில் ‘லா நினோ’ நிகழ்வால் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

வடகொரியா உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கொடிய பாக்டீரியா மற்றும் வைரஸ்களை உருவாக்கி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் தகவலின்படி, கொடிய நோய்களை பரப்ப ஸ்ப்ரேக்கள், விஷப் பேனாக்களை வடகொரியா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அணு ஆயுதத் திட்டத்தில் குறைவான கவனம் செலுத்திவரும் வடகொரியா, உயிரியல் ஆயுதங்களில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 61 வயது முதியவர், 38 வயது மனிதருக்கான உடல் அமைப்புடன் இளமையாகத் தோன்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகனைச் சேர்ந்த டேவ் பாஸ்கோவுக்குத் தற்போது 61 வயதாகிறது. ஆனால் அவரின் உடலில் முதுமை தெரியவில்லை. 38 வயது நபருக்கான இளமை உள்ளது. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு எழுவது, தீவிர உடற்பயிற்சி செய்வது, இணை உணவு, சரிவிகித உணவு இதற்குக் காரணமென டேவ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.