news

News April 19, 2024

UPSC தேர்வில் தோற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 இலட்சம் பேர் UPSC தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் வெறும் 800 பேர்தான். மீதமுள்ள 99% பேர் தோல்வியடைகின்றனர். இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஜீரோதா டிரேடிங் நிறுவனம் முதலீடு செய்துள்ள டிட்டோ இன்சூரன்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பணி வழங்க முன்வந்துள்ளது. அதன்படி, முன் அனுபவம் இல்லாவிட்டாலும் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

News April 19, 2024

17 தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம்

image

1951 முதல் 2019 வரை தமிழகத்தில் நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதம்.
*1951-52 – 59.33% வாக்குகள் பதிவு
*1957 – 47.75% *1962 – 68.77%
*1967 – 76.56% *1971 – 71.82%
*1977 – 67.13% *1980 – 66.76%
*1984 – 72.98% *1989 – 66.86%
*1991 – 63.92% *1996 – 66.93%
*1998 – 57.95% *1999 – 57.98%
*2004 – 60.81% *2009 – 72.94%
*2014 – 73.74% *2019 – 71.87%

News April 19, 2024

தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு

image

தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இன்னும் பலர் டோக்கன் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வரிசையில் நிற்பதால் சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 19, 2024

39 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. காலை 7 மணிக்கு முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். அங்கு ஆயுதம் ஏந்திய போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாடு முழுவதும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

News April 19, 2024

நடிகர் விஜய்க்கு படப்பிடிப்பில் விபத்து

image

வாக்கு செலுத்துவதற்காக ரஷ்யாவில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை வந்தார் விஜய். அப்போது அவரது கையில் Band-aid அணிந்திருந்தார். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் GOAT படப்பிடிப்பின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது அவருக்கு சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் அவர் ப்ளாஸ்திரியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.

News April 19, 2024

நீங்க இறந்துட்டீங்க.. அதிர்ச்சி அடைந்த முதியவர்

image

வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் அலுவலர் கூறியதைக் கேட்டு அதிர்ந்த அவர், பூத் சிலிப்புடன் வந்த நான் என்ன பேயா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

News April 19, 2024

காலையில் புறக்கணிப்பு.. மாலையில் வாக்களிக்க ஆர்வம்

image

புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாலையில் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

News April 19, 2024

IPL: சென்னை அணி பேட்டிங்

image

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள லக்னோ கேப்டன் KL ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் CSK புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திலும், 3 வெற்றி 3 தோல்வியுடன் LSG 5 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 19, 2024

9 இடங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்த வெயில்

image

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், இன்று மட்டும் 9 இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது. இதில், ஈரோடு – 43 டிகிரி செல்சியஸ் (dC), வேலூர் – 41.9 dC, கரூர் பரமத்தி – 41.5 dC, திருச்சி – 41.3 dC, சேலம், திருத்தணியில் தலா 41.2 dC, மதுரை, தருமபுரியில் 41 dC, திருப்பத்தூரில் – 40.4 dC வெயில் பதிவாகியுள்ளது.

News April 19, 2024

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்

image

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா, து.முதல்வர் DK சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த அவர்களுக்கு காங்., தலைவர் கார்கே வரவேற்பு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!