India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும், 2024 மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதம் குறைந்துள்ளது. 2019 தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவாகியிருந்தது. ஆனால் 2024 தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோல 3% வாக்குப்பதிவு குறைந்திருப்பதற்கு, கிராமங்களில் மோசமான போக்குவரத்து, வார இறுதி பயணத்திட்டமே காரணமாகக் கூறப்படுகிறது.

நாசா உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பிய 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன்-9 ரக ராக்கெட்டில் இந்தச் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
இவை அதிவேக இணைய சேவைகளுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்று மநீம தான் என அரசியலில் குதித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருக்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியினர் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், மாணவர் அணி தலைவர் சங்கர் ரவியும் நேற்று விலகியுள்ளார். இதற்கு முக்கியமாக அவர் சொல்வது உட்கட்சி பிரச்னை, தலைமை செயல்பாட்டில் அதிருப்தி. இனியாவது கமல், உட்கட்சி பிரச்னைகளில் தலையீட்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும்.

ஹைதராபாத் – டெல்லி அணிகள் மோதிக்கொள்ளும் (35ஆவது) ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹைதராபாத் அணி, புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளை வீழ்த்திய ஹைதராபாத் அணியை, டெல்லி அணி தங்கள் சொந்த மைதானத்தில் வீழ்த்துமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்று வெற்றி பெறப் போவது யார்?

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வளர்ச்சி என்பது வெறும் காதில் மட்டும் தான் கேட்கிறது என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் அதிகாரம் மிக வலிமையானது என்று சொல்லி இருக்கிறார். அது என்ன வேண்டுமென்றாலும் செய்யும். அதனை நல்லவர்கள் கைப்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக 3ஆவது கட்சியாக அல்ல 30ஆவது கட்சியாக கூட இருக்காது எனக் கூறினார்.

சாதி ஏற்றத்தாழ்வுகளை, சமூக நீதி அரசியலை கமர்ஷியல் மசாலா கலந்த ‘மாமன்னன்’ போன்ற படங்கள் மூலம் மக்களை ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். 1999இல் நடந்த உண்மைச் சம்பவத்தை ‘வாழை’ என்கிற பெயரில் அவர் எழுதி, இயக்கியுள்ளார். ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவரே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். வாழ்வில் தான் கண்ட மனிதர்களின் வலியை இப்படத்தில் அவர் காட்சிப்படுத்தி உள்ளாராம்.

✍உண்மையைத் தேடி கண்டறிவது அறிவியல்; வெறுமனே தனக்குத் தெரியும் என்று நம்புவது அறியாமை. ✍அளவுக்கு மிஞ்சிய அனைத்தும் இயற்கைக்கு எதிரானது. ✍மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார்; ஆனால், இயற்கையே குணப்படுத்துகிறது. ✍பயன்படுத்தப்படுவது வளர்ச்சியடைகிறது; பயன்படுத்தப்படாதது வீணாகிறது. ✍புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீக விடயங்களுக்கு முடிவே இருக்காது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்ற ராகுல் காந்தி தானும் பணம் பறிப்பில் ஈடுபட்டதாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் விகிதத்தையும், அவர்கள் பெற்ற நன்கொடையையும் பார்க்கும்போது, எங்களை விட அவர்கள் தான் அதிகமாக பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் கட்சி மட்டும் ரூ.1,334 கோடியும் நன்கொடை பெற்றது எனக் கூறினார்.

மாலத்தீவு முன்னாள் அதிபரும் சீன ஆதரவாளருமான அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், 2022இல் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

இறுதி ஆட்டக்காரராக களத்திற்கு வந்து, மூன்று பவுண்டரிகள் அடித்து அற்புதமாக ஃபினிஷிங் செய்த தோனிக்கு தலைவணங்குவதாக LSG அணியின் வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், CSK-க்கு எதிரான இந்த வெற்றியை முக்கியமானதாகக் கருதுகிறோம். இன்னும் சில நாள்களில் சேப்பாக்கத்தில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளோம். அதற்கு முன் LSG வெற்றிப் பாதைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.