India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் NDA கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பேசிய அவர், காங். ஆட்சியில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கவே தாங்கள் நிறைய நேரத்தைச் செலவழித்தாகச் சாடினார். 25% இடங்களில் I.N.D.I.A கூட்டணியினர் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதாக விமர்சித்த அவர், மக்களவைத் தேர்தலுக்கு பின்பு அக்கூட்டணி உடையும் என்றும் கூறினார்.

▶முதியவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்கள் மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். ▶முடிந்த வரை வீடுகளை பகல் நேரங்களில் மூடியும், இரவில் சிறிது திறந்தும் வைத்துக் கொள்ளுங்கள். ▶வெளியில் செல்லும் போது, குடை கொண்டு செல்லுங்கள். ▶நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். ▶தண்ணீர் குடிப்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். ▶காரமான உணவுகளை அறவே தவிர்த்திடுங்கள்.

150 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் கூட்டத்தில் பேசிய அவர், இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெல்வோம் என பாஜக கூறி வருவதாகவும், ஆனால் 150 இடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் கூட வெல்லாது என்றும் குறிப்பிட்டார். I.N.D.I.A. கூட்டணி ஆட்சியமைத்ததும், அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும், ஜிஎஸ்டி மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

என்.ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம், வரும் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை பிரியாலயா அறிமுகமாகிறார். இதில் தம்பி ராமையா, முனிஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்திருந்தது.

ஐபிஎல் விதியை மீறியதற்காக, மும்பை வீரர் டிம் டேவிட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில், மைதானத்திற்கு வெளியே இருந்த இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவிடம் சைகை மூலம் ரிவியூ எடுக்கச் சொன்னார்கள். ஐபிஎல் விதிப்படி அது தவறு. இதனால் இருவருக்கும் அப்போட்டியின் சம்பளத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வட தமிழகம், உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், அரபிக்கடல் பகுதியில் 40 – 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

வயநாடு தொகுதியை விட்டு ராகுல் காந்தி ஓடப் போவதாக மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, வயநாட்டில் இளவரசர் (ராகுல்) பிரச்னையை சந்திப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றும், தேர்தல் முடிந்ததும், அவர் அமேதியை விட்டு ஓடியது போல வயநாட்டை விட்டுவிட்டு பாதுகாப்பான வேறொரு தொகுதிக்கு ஓடப் போகிறார் என்றும் மோடி கூறினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும், பாஜக வீழ்ச்சியை சந்திக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ சூளுரைத்துள்ளார். மக்களவைத் தேர்தல் மூலம் மதவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தேர்தல் முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும், முதல்முறையாக வேட்பாளராக பரப்புரை செய்தது புது அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து நேற்றிரவு 7 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்ட அறிவிப்பில் 72.09% என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இரவு 12 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், 69.04% எனக் கூறப்பட்டிருந்தது. இந்த 2 அறிவிப்புகளில் எது சரி, எது தவறு எனத் தெரியாமல் வாக்காளர்கள், அரசியல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 5 ஆண்டில் 41% அதிகரித்து ₹811 கோடியாக உயர்ந்துள்ளது. 2019இல் இது ₹668 கோடியாக இருந்தது. இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் குப்பத்தில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ஹெரிடெஜ் நிறுவனத்தில் ₹764 கோடி மதிப்பு பங்குகள், ₹4.80 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ₹36.31 லட்சம் மதிப்பு அசையா சொத்து உள்ளிட்டவை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.