India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘LCU’-வின் ஆரம்பக் கதையைக் கூறுவதற்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இதில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறும்படத்தின் மொத்த நீளம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 39 தொகுதிக்கான மக்களவைத் தேர்தலும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்னும் 6 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு இன்னும் 45 நாள்கள் உள்ளதால், அதுவரை தமிழக மக்கள் முடிவை அறியக் காத்திருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் விலகுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரும், பிரியங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளருமான தஜிந்தர் சிங் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கட்சியில் இருந்து விலகிய சிறிது நேரத்திலேயே அவர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக – கேரள எல்லைகளில் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் தமிழ்நாடு கால்நடைத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோழி உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

2024 டி20 உலகக் கோப்பை தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்க அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியின் புதிய உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இதில், ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், சிராஜ், குல்தீப் யாதவ் ஆகிய 10 பேர் இடம் பிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் அலை வீசுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தேசத்திலோ அல்லது கர்நாடகத்திலோ மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை என்றும், நாட்டு மக்களிடையே மோடிக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார். அதேநேரத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணிக்கு சாதகமான அலை வீசுகிறது என்றும் அவர் கூறினார்.

மகாவீர் ஜெயந்தி மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மலர் சந்தைகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை ரூ.500, முல்லை ரூ.300, கனகாம்பரம் ரூ.300, சம்பங்கி ரூ.250, அரளி & செவ்வந்தி ரூ.200க்கு விற்பனையாகிறது. அதேபோல், நந்தியாவட்டை பூ, மரிக்கொழுந்து விலையும் அதிகரித்துள்ளது.

மேகதாது அணை தொடர்பான டி.கே.சிவகுமாரின் பேச்சைக் கண்டிக்காமல் முதல்வர் அமைதி காப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் உடனான உறவுக்காக மேகதாதுவில் தமிழகத்தின் நலனை விட்டுத் தரக்கூடாது என்ற அவர், டி.கே.சிவகுமாரின் பேச்சுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக மோசடி செய்தாவது மேகதாது அணையைக் கட்டுவோம் என டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை, இந்த மாத இறுதியில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடர், வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், ரோஹித் ஷர்மா, ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் தலைமையிலான ஆலோசனை குழு, 15 பேர் கொண்ட இந்திய அணியை மே 1ஆம் தேதி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கடன் ₹205 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். கேரளாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் கடன் முன்பு ₹55 லட்சம் கோடியாக இருந்ததாகவும், அது தற்போது ₹205 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டதென்றும் கூறினார். ஆனால் பொய்யான புள்ளி விவரத்தை வெளியிட்டு பொருளாதாரம் உயர்ந்துவிட்டதாக கூறி, கொண்டாடச் சொல்வதாக பாஜகவை பிரியங்கா விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.