news

News April 20, 2024

ஈரோடு, திருப்பத்தூரில் வெளுத்து வாங்கும் கனமழை

image

ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சத்தியமங்கலம், தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

News April 20, 2024

ஜூன் 4இல் பாஜகவுக்கு ஷாக் அடிக்கும்

image

ஜூன் 4ஆம் தேதி மோடிக்கு 440 வாட்ஸ் ஷாக் கிடைக்கப் போகிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்வோம் என மோடி கூறுகிறார். ஆனால், பாஜகவுக்கு ஷாக் அடிக்கும் தேர்தல் முடிவுகளை இந்திய மக்கள் தர தயாராகி வருவதாக தெரிவித்த அவர், பாஜகவும், மோடியும் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் என்பதை நாட்டுமக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

News April 20, 2024

11, 12 ஆம் வகுப்பு CBSE பொதுத்தேர்வில் மாற்றம்

image

அடுத்த ஆண்டு 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக CBSE அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் ஸ்டடிஸ், டேட்டா அனாலிசிஸ் கேள்விகள் 40% இல் இருந்து 50% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நீண்ட, விளக்கமாக பதில் தரக்கூடிய பாரம்பரிய கேள்விகளின் வெயிட்டேஜ் 40%இல் இருந்து 30% ஆக குறைக்கப்பட்டுள்ளது. Select response வகை மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளில் -MAQ (20%) மாற்றம் இல்லை.

News April 20, 2024

செவ்வாழைப் பழத்தில் இத்தனை பலன்களா?

image

செவ்வாழையில் அதிக அளவில் உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மாலைக்கண் நோய், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்து. 21 நாள்கள் செவ்வாழையை தொடர்ந்து சாப்பிட்டால் ஆடிய பல் கூட கெட்டியாகிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். நரம்புகள் பலம் அடையும்.

News April 20, 2024

நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கடும் பதிலடி

image

மக்கள் பணத்தை கொள்ளையடிக்க பாஜக விரும்புவதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத்திற்கு தடை விதித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கொண்டு வருவோம் என பாஜக கூறுவது, கொள்ளை அடித்தே பாஜக பழக்கப்பட்ட கட்சி என்பதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார். மீண்டும் தேர்தல் பத்திர நடைமுறை கொண்டு வரப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

News April 20, 2024

ஐடி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சரிவு

image

கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவின் டாப் 3 ஐடி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. 6 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட டிசிஎஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் 13,249 ஊழியர்களை குறைத்துள்ளது. இதே போல, இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களும் ஊழியர்களை கணிசமாக குறைத்துள்ளன. நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஊழியர்களை விட குறைந்த ஊழியர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

News April 20, 2024

ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா ரோஜா?

image

நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா வேட்புமனு தாக்கல் செய்தார். ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் 3ஆவது முறையாக போட்டியிடும் அவர், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இதே தொகுதியில் இருந்து குறைவான வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார்.

News April 20, 2024

விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்

image

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45,509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனக் கூறியுள்ள அதிகாரிகள், அதன் பிறகு உணவு வழங்கல் துறை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர்.

News April 20, 2024

ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இரவு 7 மணி வரை ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்துவருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

News April 20, 2024

தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயம்

image

தூர்தர்ஷனின் லோகோ, சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஊடக வல்லுநர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஜவகர் சிர்கார், லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!