India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் ஆணையம், பாஜக அரசின் கட்டளை படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை காபந்து அரசாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அமைப்புக்களும் அவர்களின் விருப்பப்படி நடப்பதாக கூறிய அவர், இந்த தேர்தல் முடிவில் நாட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

சித்ரா பெளர்ணமியையொட்டி ஏப்ரல் 22, 23-இல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் சித்ரா பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அவர்களது வசதிக்காக திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு பண்ணலாம்.

கோடை சீசனையொட்டி பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களைத் திட்டமிட்டிருபப்தாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சீனாவின் முக்கிய நகரங்கள் பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெருமளவில் சுரண்டப்படுதல், நகரமயமாதல் ஆகிய காரணங்களால் நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ அளவில் கீழ் நோக்கி நகர்ந்து வருகின்றன. சுமார் 6.7 கோடி மக்கள் நிலப்புதைவு ஏற்படும் நகரங்களில் வாழ்ந்து வருவதால் அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த அருண் என்பவர், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் கொள்ளையனுடன் Chat செய்துள்ளார். ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் பணமோசடி செய்யும் அந்த கொள்ளையன், எப்படியெல்லாம் மோசடி செய்கிறார் என்ற நுட்பத்தை அப்பாவித் தனமாக விவரித்துள்ளார். இறுதியில் அருணின் திட்டத்தை உணர்ந்து கொண்ட கொள்ளையன் காவல்துறையை அணுக வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வாட்ஸ்அப் Chat இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பந்த் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து SRH இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் SRH புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றுள்ள டெல்லி அணி 6ஆவது இடத்தில் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 69.46% வாக்குகள் பதிவான நிலையில் 30.54% மக்கள் வாக்களிக்கவில்லை. சேலம், கோவை, வேலூர், கள்ளக்குறிச்சியை தவிர்த்து, எஞ்சியுள்ள 35 தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பதிவானதைவிட குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

இந்திய அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கிரிக்கெட்டில் தற்போது சிறப்பாக விளையாடி வந்தாலும், உலகக்கோப்பையில் என் பங்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்திய அணியின் வெற்றிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனக் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக்கிற்கு டி20 WC அணியில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் அட்டை’ வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறலாம். குடிசை வீட்டில் வசிப்போர், தினக்கூலிகள், நிலம் இல்லாத மக்கள், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்கள் இந்த அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். PM JAY என்ற மொபைல் செயலி மூலம் வீட்டில் இருந்தே இந்த அட்டைக்கு விண்ணபிக்க முடியும்.

மாநில அரசுகள் ஆளுநரை எதிரியாக பார்ப்பது சரியல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பதவி. ஆனால், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த பதவிக்கு உரிய மரியாதையை ஆளும் அரசுகள் தருவதில்லை. மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஆளுநரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இது ஆரோக்கியமான ஐனநாயகத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.