India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SRHக்கு எதிரான போட்டியில் DC வீரர் மெர்குர்க் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல்லில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வால் (13 பந்து) உள்ளார். KL ராகுல், கம்மின்ஸ் 14 பந்துகளில் அடித்துள்ளனர். யூசுப் பதான், பூரண், நரைன் 15 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளனர். மெர்குர்க் 65 (18) ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணி நிர்ணயித்த 267 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிவரும் டெல்லி அணி 4 ஓவரில் 61/2 ரன்கள் எடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக SRH வீசிய 3ஆவது ஓவரில் மட்டும் டெல்லி வீரர் மெக்குர்க் 30 ரன்கள் அடித்துள்ளார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய அவர் 3ஆவது பந்தில் சிக்ஸர் அடித்தார். பின் 4ஆவது பந்தில் பவுண்டரி அடித்த அவர், கடைசி 2 பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசினார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகளைத் தளர்த்த வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்த நிலையிலும், மக்கள் ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடர்வது நியாயமற்றதாகும் எனக் கூறிய அவர், மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவற்றை தடையின்றி செயல்படுத்த விதிகளை தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகிறது.

தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவான நிலையில், அந்தத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போது வாக்குப்பதிவு 3.01% குறைந்துள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், இறுதியாக வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதத்தை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார். தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 39 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடந்துள்ளதால் மறு வாக்குப் பதிவு நடைபெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் எனப் பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர், 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தனது கணவர் மற்றும் மகன் உடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் காலமானார். முதல்கட்ட மக்களவைத் தேர்தலில், மொரதாபாத் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அங்கு பாஜக சார்பில் சர்வேஷ் போட்டியிட்டார். இன்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறியது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வதோதரா தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பாஜக இளம் வேட்பாளர் ஹேமங் கூறியுள்ளார். வதோதரா மக்களவை தொகுதிக்கான எம்.பி.யாக ரஞ்சன் பட் பதவி வகித்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்தது. எனினும், அவர் போட்டியிட மறுத்ததால் 33 வயதான ஹேமங் என்பவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்த தொகுதியில் ஏற்கெனவே மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 0.84% அதிகரித்து ரூ.16,511 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் நிகர லாபம் ரூ.16,373 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாயைப் பொறுத்தமட்டில், ரூ.28,470 கோடியிலிருந்து ரூ.29,007 கோடியாக உயர்ந்துள்ளது. மோசமான கடன்கள் 1.26%இல் இருந்து 1.24%ஆக குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.